ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

SBI Yono Lite மொபைல் ஆப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

SBI Yono Lite மொபைல் ஆப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

SBI Yono LIte App

SBI Yono LIte App

கூகுள் பிளேஸ்டோரில் யோனோ லைட் எஸ்.பி.ஐ ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள் (SBI Yono Lite app)

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, (எஸ்.பி.ஐ) தனது Yono Lite ஆப்பில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய  அம்சம், வாடிக்கையாளர்களுக்கு, ஆன்லைன் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தும் போது, கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், அதிகப்படியான மோசடிகள் நடைபெறுவதால், வாடிக்கையாளர்களுக்கு பண ரீதியான மற்றும் பணம் அல்லாத பரிவர்த்தனைகளில் பாதுகாப்பாக ஈடுபட இந்த ஆப் உதவுகிறது. எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்களின் ஆன்லைன் செயலியை புதுப்பித்து, எஸ்.பி.ஐ Yono Lite ஆப்பை பயன்படுத்தத் தொடங்கலாம். “முன்பை விட ஆன்லைன் பேங்கிங்கை அதிக பாதுகாப்பு அம்சத்துடன் வழங்குகிறது எஸ்.பி.ஐ. யோனோ லைட் ஆப்பை  டவுன்லோட் செய்யுங்கள்.” என்று எஸ்.பி.ஐ ஒரு டிவீட்டில் தெரிவித்தது.

Also Read:  அட்ரஸ் கேட்பது போல் வந்து, மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

இந்த ஆப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

இதில் உள்ள சிம் (SIM) பைண்டிங் அம்சம் : சிம் பைண்டிங் என்பது புத்தம் புதிய தொழில்நுட்ப அம்சமாகும். இது ஆன்லைன் பேங்கிங்கை முன்பை விட அதிக பாதுகாப்புள்ளதாக மாற்றுகிறது. இந்த அம்சம், யூசர்களை ஒரு சாதனத்தில் ஒரு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் Yono Lite  ஆப்பை அப்டேட் செய்த பிறகு, தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, ஒன்-டைம்-ரெஜிஸ்ட்ரேஷன் எனப்படும் ஒரு முறை பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும்.

Yono Lite  வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி மற்றும் கணக்கை நிர்வகிக்க, பல்வேறு அம்சங்களுடன் வரும் யோனோ லைட் வசதியான, பாதுகாப்பான மற்றும் பயன்படுத்த எளிதான ஆப் ஆகும்.

Also Read:  யப்பா என்னா அடி..! போலீஸ் முன்னிலையில் டேக்ஸி ஓட்டுநரை தாக்கிய இளம் பெண்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

யோனோ லைட் ஆப் – ஆண்டிராய்டு யூசர்களுக்கான பதிவு செய்யும் செயல்முறை :

* கூகுள் பிளே ஸ்டோரில் யோனோ லைட் எஸ்.பி.ஐ ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள் (SBI Yono Lite app)

* பதிவு செய்தல் செயல்முறையை முடிக்க, உங்கள் வங்கிக் கணக்குடன் பதிவு செய்யப்பட்டிருக்கும் சிம் 1 அல்லது சிம் 2 ஐ தேர்வு செய்யவும். உங்கள் மொபைலில் ஒரு சிம் மட்டுமே இருந்தால், சிம் தேர்வு செய்யத் தேவையில்லை.

* உங்கள் மொபைல் எண்ணை சரிபார்க்க, ஒரு SMS உங்கள் மொபைல் திரையில் டிஸ்ப்ளே ஆகும்.

* “Proceed” என்ற பட்டனை கிளிக் செய்தபின், உங்கள் மொபைலில் இருந்து ஒரு தனித்துவ கோட் (code) கொண்ட ஒரு SMS, ப்ரீ-டிஃபைண்டு எண்ணுக்கு அனுப்பப்படும்.

* உங்கள் மொபைல் எண்ணின் SMS திட்டத்திற்கு ஏற்ப, இந்த SMS அனுப்புவதற்கு, SMS சார்ஜ் செய்யப்படும்.

* யூசர்நேம் மற்றும் கடவுச்சொல்லை நிரப்பி, பதிவு செய் (REGISTER) என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

* செக் பாக்சை ‘டிக்’ செய்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, ஆக்டிவேஷன் கோட் அனுப்பப்படும். இந்த ஆக்டிவேஷன் கோட், 30 நிமிடங்கள் வரை செல்லுபடியாகும்.

* ஆப்பில் ஆக்டிவேஷன் கோட் உள்ளிட்டவுடன், உங்கள் ஆக்டிவேஷன் செயல்முறை முடிந்துவிடும்.

* இந்த செயல்முறை, எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களை யோனோ லைட் அப்ளிகேஷன் பயன்படுத்த அனுமதிக்கிறது.

iOS யூசர்களுக்குக்கான பதிவு செய்தல் செயல்முறை :

* உங்கள் மொபைலின் ஆப் ஸ்டோரில் யோனோ லைட் எஸ்.பி.ஐ ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள் (SBI Yono Lite app). உங்கள் மொபைல் எண்ணை சரிபார்க்க, ஒரு SMS உங்கள் மொபைல் திரையில் டிஸ்ப்ளே ஆகும்.

* “Proceed” என்ற பட்டனை கிளிக் செய்தபின், உங்கள் மொபைலில் இருந்து ஒரு தனித்துவ கோட் (code) கொண்ட ஒரு SMS, ப்ரீ-டிஃபைண்டு எண்ணுடன் SMS ஆப்பில் ஆட்டோ-ஃபில் ஆகும். எஸ்.பி.ஐ வங்கியுடன் பதிவு செய்திருக்கும் மொபைல் என்னிலிருந்து, யூசர் இந்த SMS ஐ, 30 நொடிகளுக்குள் அனுப்ப வேண்டும். உங்கள் மொபைல் எண்ணின் SMS திட்டத்திற்கு ஏற்ப, இந்த SMS அனுப்புவதற்கு, SMS சார்ஜ் செய்யப்படும்.

* யூசர்நேம் மற்றும் கடவுச்சொல்லை நிரப்பி, பதிவு செய் (REGISTER) என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

* செக் பாக்சை ‘டிக்’ செய்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள, ‘OK’ என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

* உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, ஆக்டிவேஷன் கோட் அனுப்பப்படும். ஆப்பில் ஆக்டிவேஷன் கோட் உள்ளிட்டவுடன், உங்கள் ஆக்டிவேஷன் செயல்முறை முடிந்துவிடும்.

* இந்த செயல்முறை, எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களை யோனோ லைட் அப்ளிகேஷன் பயன்படுத்த அனுமதிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வங்கி எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி மட்டுமே வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்கள் ஆப்பில் லாகின் செய்ய வேண்டும். வேறு மொபைல் எண்ணை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதை யோனோ ஆப் அனுமதிக்காது.

First published:

Tags: Android Apps, Mobile phone, SBI, SBI Bank, Technology