முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / DigiLocker: ஆதார் முதல் ட்ரைவிங் லைசன்ஸ் வரை..? ஆவணங்கள் தொலைந்து போகும் கவலை இனி இல்லை!

DigiLocker: ஆதார் முதல் ட்ரைவிங் லைசன்ஸ் வரை..? ஆவணங்கள் தொலைந்து போகும் கவலை இனி இல்லை!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

டிஜிலாக்கர் என்பது, அரசில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் முன்னெடுக்கப்படும் முன்மாதிரியான திட்டம். இதன் மூலம் ஒவ்வொரு குடிமக்களும் சான்றிதழ்கள் அல்லது ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ள முடியும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பெரும்பாலோனர் வெளியில் செல்லும்போது டிரைவிங் லைசென்ஸ் எடுத்துச் செல்வதில்லை.. இதனால் பல நேரங்களில் டிராஃபிக் போலிசாரிடம் சிக்கி அபராதம் கட்டியிருப்போம். இதேபோன்று ஏதாவது அலுவலக பணி அல்லது வேறு எந்த பணிக்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் செல்லும் ஒரிஜினல் ஆதார் அட்டையை எடுத்துச் செல்வதற்கு நிச்சயம் நாம் மறந்திடுவோம். இதனால் அந்த நேரத்தில் தேவையில்லாத டென்சனை நாம் அனுபவிக்க நேரிடும்.

இனி இதுபோன்ற எவ்வித பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது என்கிறது மத்திய அரசு. எப்படி தெரியுமா?. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக டிஜிலாக்கர் நாம் பயன்படுத்தலாம். டிஜிலாக்கர் கணக்கை எவ்வாறு உருவாக்க முடியும்? இதன் மூலம் எப்படி முக்கிய ஆவணங்களைச் சேகரித்து வைக்க முடியும்? என்ற கேள்வி நிச்சயம் இந்நேரத்தில் எழக்கூடும். இதோ அதற்கான விரிவான பதில்கள் இங்கே உங்களுக்காக..

டிஜிலாக்கர் கணக்கை உருவாக்குவது எப்படி..?

டிஜிலாக்கரில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைச் சேகரிக்கும் முறை?

டிஜிலாக்கர் என்பது, அரசில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் முன்னெடுக்கப்படும் முன்மாதிரியான திட்டம். இதன் மூலம் ஒவ்வொரு குடிமக்களும் சான்றிதழ்கள் அல்லது ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ள முடியும். கையில் ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச்செல்வதற்குப் பதிலாக டிஜிட்டல் வடிவில் நீங்கள் உங்களது ஸமார்ட்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்.

Read More : பான் ஆதார் எண்கள் இணைப்புக்கு இறுதி காலக்கெடு.. இனைக்கும் எளிய வழிகள் இதோ

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மத்திய பட்ஜெட்டை வெளியிட்ட போது டிஜிலாக்கரின் பயன்பாடு குறித்து நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். ஆதார் அட்டைப் போன்று இனி வரும் காலங்களில் பான் கார்டும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் டிஜிலாக்கரின் மூலம் ஆவணங்களை நேரடியாக கையில் வைத்திருக்கத் தேவையில்லை. மேலும் சில நேரங்களில் ஆவணங்கள் தொலைந்தாலும் கவலைப்பட தேவையில்லை.

டிஜிலாக்கரை பயன்படுத்தும் முறை:

www.digilocker.gov.in என்ற இணையதளப்பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும். பின்னர் உங்களது மொபலை் எண்ணை என்ட்ரி செய்து கடவுச்சொல்லை ( password) யை உருவாக்கி புதிய கணக்கை உருவாக்க வேண்டும். முன்னதாக நீங்கள் உங்களது தொலைபேசி எண் ஆதாருடன் இணைந்துள்ளதா? என சரிப்பார்க்க வேண்டும்.
டிஜிலாக்கரில் ஆதார் அட்டையை சேமிப்பது எப்படி? இணையதளப் பக்கத்தில் ஆதார் விருப்பத்தை என்ற லிங்க் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் ஆதார் எண்ணை என்ட்ரி செய்யவும். இதனையடுத்து ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
இப்போது நீங்கள் உங்கள் கணக்கின் டிஜிட்டல் நகலை பெற முடியும். இதோடு நீங்கள் ஆதாரை டவுன்லோடு செய்து மொபைலில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமம் மற்றும் பான் கார்டுகளை இணைப்பது எப்படி? டிஜிலாக்கர் இணையதளப் பக்கத்தில், பதிவேற்றம் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
உங்கள் ஆவணங்களைப் புகைப்படம் எடுத்து நேரடியாக பதிவேற்றலாம். டிஜிலாக்கரிலும் உங்கள் பிறப்புச் சான்றிதழைப் பதிவேற்றலாம். அதே செயல்முறையைப் பயன்படுத்தி மார்க்ஷீட் மற்றும் பாஸ்போர்ட்டையும் சேர்க்கலாம். இருப்பினும், வெளிநாடு செல்லும்போது, அசல் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
டிஜிலாக்கர் பயனர்கள் அரசு நிறுவனங்களுடன் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இதை செய்ய, சேமித்த ஆவணத்தின் மீது க்ளிக் செய்ய வேண்டும்.
பின்னர் உங்கள் ஆவணத்தை அனுப்ப விரும்பும் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
First published:

Tags: Aadhar, Pan card