Home /News /technology /

அந்த காலத்து பாடல்கள் உடன் சந்தையில் இறங்கும் சரிகம.. தாத்தா பாட்டிகள் விரும்பும் புதிய மொபைல்.!

அந்த காலத்து பாடல்கள் உடன் சந்தையில் இறங்கும் சரிகம.. தாத்தா பாட்டிகள் விரும்பும் புதிய மொபைல்.!

சரிகம கார்வான் மொபைல்

சரிகம கார்வான் மொபைல்

Saregama Carvaan Mobile | 2.4 அங்குலம் மற்றும் 1.8 அங்குலம் அளவிலான திரைகளைக் கொண்ட இரண்டு மொபைல் போன்களை “சரிகம” நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 1.8 அங்குலம்அளவு கொண்ட மொபைல் 1990க்கும், 2.4 அங்குலம் அளவு கொண்ட மொபைல் 2490க்கும் இந்தியாவில் விற்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சரிகம எனும் இந்த கம்பெனி இசை கருவிகள் மற்றும் ஒலி சம்பந்தமான துறையில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. தற்போது மொபைல் போன் தயாரிப்பில் இறங்கியுள்ள நிறுவனம் தன்னுடைய முதல் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. கார்வான் மொபைல் என பெயரிடப்பட்ட அதில் ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட 1500 அந்த காலத்து இந்தி பாடல்களுடன் விற்பனைக்கு வருகிறது.

மேலும் நம்முடைய மனநிலைக்கு தகுந்தவாறு பாடல்களை நாமே தேர்வு செய்து ஒலிக்க வைக்கும் படியும் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது பெரியவர்களுக்கு மிகவும் ஏற்ற வகையில் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

இந்த போனில் ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட 1500 பாடல்களுடன் தான் விற்பனைக்கு வருகிறது மேலும் நாம் விரும்பிய பாடல்களை கேட்பதற்கு வயர்லெஸ் எப் எம் வசதியும் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் கேமரா, டார்ச், ஆக்ஸ் வசதி, வாய்ஸ் ரெக்கார்டிங், கால் ரெக்கார்டிங், டூயல் சிம் மற்றும் பலதரப்பட்ட மொழிகளுக்கான சப்போர்ட் ஆகியவையும் இதில் உள்ளது. 8 ஜிபி அளவிலான மெமரியை கொண்டுள்ள இந்த போனில் நம்முடைய போட்டோக்கள் வீடியோக்கள் மற்றும் நாம் விரும்பும் பாடல்களை பதிவேற்றம் செய்து கொள்ள 2 ஜிபி அளவிலான மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.



இதன் பேட்டரியை பொறுத்தவரை 2500mAH திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மீடியா டெக் ப்ராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ப்ராசஸரின் காரணமாக இந்த போன் அதிவேகமாக செயல்படுகிறது. இந்த போனை வாங்குபவர்களுக்கு ஒரு வருடத்திற்கான வாரண்டியும் கொடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read : இந்தியாவில் 5ஜி சேவைகளின் விலை நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட குறைவாக இருக்கும் - காரணம் தெரியுமா.?

2.4 அங்குலம் மற்றும் 1.8 அங்குலம் அளவிலான திரைகளைக் கொண்ட இரண்டு விதமான அளவுகளில் வெளிவரும் இந்த போனில் 2.4 அங்குலம் திரையளவை கொண்ட போன் 1990 ரூபாய்க்கும், 1.8 அங்குலம் திரையளவை கொண்ட போன் 2490க்கும் இந்தியாவில் விற்கப்படுகிறது. மூன்று விதமான கலர்களில் இவை சந்தையில் கிடைக்கின்றன. எமரால்டு கிரீன், கிளாசிக் பிளாக் மற்றும் ராயல் ப்ளூ ஆகிய நிறங்களில் இவை கிடைக்கின்றன. தற்போது ஆன்லைனில் கிடைக்கும் இந்த மொபைல் விரைவிலே கடைகளுக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஆன்லைனில் வாங்க விரும்புவோர் சரிகம நிறுவனத்தின் வலைத்தளத்திலோ அல்லது அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய வலைத்தளகங்களிலோ இந்த மொபைலை ஆர்டர் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முக்கியமாக பெரியவர்களை மனதில் வைத்து அவர்களை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ அனைவரும் ஸ்மார்ட்போனுக்கு மாறிவிட்ட இந்த காலத்தில் சாதாரண கீ பேட் வகை மொபைலை அறிமுபடுத்திய செயல் சரியாய் தவறா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: India, Mobile phone, Music, Technology

அடுத்த செய்தி