ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்.! என்ன செய்ய காத்திருக்கிறார்.?

மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்.! என்ன செய்ய காத்திருக்கிறார்.?

சந்தியா தேவநாதன்

சந்தியா தேவநாதன்

Sandhya Devanathan | சந்தியா தேவநாதனின் படிப்பு தகுதிகள் மற்றும் எவ்வளவு நாள் மெட்டாவில் பணிபுரிந்தார் என்பதையும், என்னென்ன பதவிகளில் இருந்தார் என்பதையும் அவருடைய எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை பற்றியும் பார்ப்போம்!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மெட்டா (META) இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். மெட்டா இந்தியாவின் முன்னாள் தலைவர் அஜித் மோகன் பதவி விலகியதை தொடர்ந்து அவருடைய இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்ற கேள்வி பலரின் மனதில் இருந்து வந்ததை தொடர்ந்து, அதன் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வரும் சந்தியா தேவநாதன் நிரப்ப உள்ளதாக மெட்டா நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் சந்தியா தேவநாதன் மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது. முன்னர் பேஸ்புக் (facebook) என்றழைக்கப்பட்ட மெட்டா நிறுவனத்தில் தற்போது பணியாற்றி கொண்டிருக்கும் சந்தியா தேவநாதனின் படிப்பு தகுதிகள் மற்றும் எவ்வளவு நாள் மெட்டாவில் பணிபுரிந்தார் என்பதையும், என்னென்ன பதவிகளில் இருந்தார் என்பதையும் அவருடைய எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை பற்றியும் பார்ப்போம்!

யார் இந்த சந்தியா தேவநாதன்!

சந்தியா தேவநாதன் ஆந்திராவில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் 1994 ஆண்டில் பி.டெக் (B-tech) கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு தன்னுடைய எம்பிஏ (MBA) படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் 1998 ஆம் ஆண்டு முடித்தார். 2014 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தலைமை பண்பை பற்றிய படிப்பை முடித்துள்ளார்.

இவர் வேலையில் சேர்ந்தது முதலே மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் கவரும் விதத்தில் வேலை பார்த்துள்ளார். சிட்டி குரூப்பில் தனது முதல் பணியை துவங்கியவர் அதன் பின்பு ஸ்டாண்டர்ட் சாட்டர்டில் 2009 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டில் தான், அப்போது பேஸ்புக் என்று அழைக்கப்பட்ட மெட்டா நிறுவனத்தில் இணைந்தார்.

Also Read : ஆண்ட்ராய்டு போனை அப்டேட் செய்வதில் இவ்வளவு விஷயம் உள்ளதா?

தென்கிழக்கு ஆசியாவின் குழு இயக்குனராக பணியாற்றினார். அதன் பின்பு எட்டு மாதங்கள் கழித்து மெட்டா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். சிங்கப்பூர் மெட்டா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும், வியட்நாமின் தொழில் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

ஆசிய சந்தையை பற்றிய அனைத்து நோக்கங்களையும் கற்றுத் தெளிந்த சந்தியாவிற்கு, மெட்டாவின் தலைமை பொறுப்பை ஏற்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டாவின் தயாரிப்புகளான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றங்களை அவர் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாட்ஸ் அப்பிற்கும் ஜியோ மார்ட்டிற்கும் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அந்த திட்டத்தை சந்தியா செயல்படுத்த ஆர்வம் காட்டலாம் என்றும் தெரிகிறது.

Also Read : வாட்ஸ்அப்பில் புதிதாக அறிமுகமாகும் டூ நாட் டிஸ்டர்ப் மோட்.!

தற்போது சிறிய சரிவை சந்தித்து வரும் மெட்டாவில் புதிய திட்டங்களை துவக்கி ஒரு எழுச்சி ஏற்படுத்துவார் என்று அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: Meta, Tamil News, Technology