• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 2 டிஸ்பிளே, அசத்தல் கேமரா பியூச்சர்ஸ் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போன்!

2 டிஸ்பிளே, அசத்தல் கேமரா பியூச்சர்ஸ் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போன்!

சாம்சங்  கேலக்ஸி Z போல்டு 3

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3

பிங்கர் பிரின்ட் அடிப்படையாகக் கொண்டு இந்த வகையான டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

  • Share this:
ஸ்மார்ட்போன் சந்தையில் உலகளவில் கோலோச்சும் சாம்சங் நிறுவனம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அட்வான்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 (Galaxy Z Fold 3) ஸ்மார்ட்போன் மாடல், 2021 ஆம் ஆண்டில் இதுவரை வெளியாகியுள்ள மொபைல்களில் பெஸ்ட் பியூச்சருடன் இருக்கும் மொபைலாக உள்ளது. இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால், 2 டிஸ்பிளே கொண்ட இந்தப் போனை மடித்து விரித்துக்கொள்ளலாம். அட்வான்ஸ் பியூச்சர் அம்சங்கள் கொண்ட கேமரா மற்றும் புரோசசர் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்டைல், புரோடக்டிவிட்டி மற்றும் டூயூரபிலிட்டி எனப்படும் உழைக்கும் காலம் ஆகிய மூன்றும் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷலாக இருக்கிறது.

ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போன் இரண்டு டிஸ்பிளேக்களைக் கொண்டுள்ளது. வெளிப்புற மற்றும் மெயின் என இரண்டு டிஸ்பிளேக்களை தேவைக்கேற்ப மடித்துக்கொள்ளலாம். வெளிப்புறத்தில் உள்ள டிஸ்பிளே 6.2 இன்ச், இரண்டாவது டிஸ்ப்ளே 7.6 இன்ச் அளவில் உள்ளது. ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டுடன், 12 ஜிபி ரேம் வசதியுடன் 126 ஜிபி அல்லது 256 ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. 5 ஜி கனக்கெட்டிவிட்டியையும் சப்போர்ட் செய்யும். கவர் டிஸ்பிளேவில் செல்ஃபி கேமரா கிடையாது. கவருக்கும் கீழாக செல்பி கேமராக கொடுக்கப்பட்டிருக்கும். சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருக்கும் முதல் அன்டர் டிஸ்பிளே கேமரா போன் இது. கேமாரவில் 4 எம்.பி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிங்கர் பிரின்ட் அடிப்படையாகக் கொண்டு இந்த வகையான டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் உருவாக்கியுள்ளது. IPX8 வாட்டர் ரெசிஸ்டென்ட் வசதியுடன் வந்திருக்கும் முதல் ஸமார்ட்போன், கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன். இது முழுமையாக ஆர்மர் அலுமினியம் பிரேமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உயர்தரமான ஸ்வீப்பர் டெக்னாலஜியும் கொடுக்கப்பட்டிருப்பதால், தூசு உள்ளிட்டவை மொபைலுக்குள் சேராமல் பாதுக்காக்கிறது.

மொத்தம் 5 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 3 கேமராக்கள் பின்பக்கத்திலும், ஒரு கேமரா மெயின் டிஸ்பிளேவில் கவருக்கு கீழாகவும் இடம்பெற்றிருக்கும். கவர் டிஸ்பிளேவில் மற்றொரு கேமரா இடம்பெற்றிருக்கும். ரீர் டிரிப்பிள் கேமரா 12 எம்.பி அல்ட்ராவைட் சென்சார் வசதியுடனும், 12 எம்.பி டூயல் பிக்சல் பிரைமரி சென்சாருடனும் இருக்கும். 12 எம்.பி டெலிபோட்டோ சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜூம் ஆப்சனில் 2X ஆப்டிக்கல் ஜூம், 10 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆப்சன் உள்ளது. வீடியோ ரெக்கார்டிங் வசதியானது HDR10+ தரத்தில் பதிவாகும். கேலக்ஸி இசட் போல்டு 3, ஆன்டிராய்டு 11 ஆப்ரேடிங் சிஸ்டத்தை கொண்டு இயங்குகிறது.

Also read... Hangouts-லிருந்து வரவேற்பை பெறாத Chat-க்கு மாற யூஸர்களை கூகுள் கட்டாயப்படுத்துவது ஏன்?

4,400 mAh பேட்டரி வசதி மற்றும் பயோமெட்ரிக் லாக், முகம் அல்லது பிங்கர் பிரின்ட் லாக் வசதிகள் உள்ளன. Phantom பிளாக், பச்சை மற்றும் சில்வர் கலர்களில் இந்தப்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. விலையைப் பொறுத்த வரையில் சாம்சங்க் கேலக்ஸி இசட் போல்டு 3 போன்கள் 1,799.99 அமெரிக்க டாலராக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ப்ரீ ஆர்டரில் புக் செய்பவர்களுக்கு சாம்சங் கேர் + பாதுகாப்பு, ஸ்கிரின் மற்றும் வாட்டர் டேமேஜ் ரீப்பிளேஸ்மென்டுகள் இலவசமாக கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: