Home /News /technology /

நீட்டினால் டேப்லெட், மடக்கினால் செல்ஃபோன்: சாம்சங்கின் புதிய கேலக்ஸி எஃப்

நீட்டினால் டேப்லெட், மடக்கினால் செல்ஃபோன்: சாம்சங்கின் புதிய கேலக்ஸி எஃப்

சாம்சங் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி எஃப்(கான்ஸப்ட் படம்)

சாம்சங் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி எஃப்(கான்ஸப்ட் படம்)

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சாம்சங் மொபைல் நிறுவனம் டேப்லெட்டாகவும், ஃபோனாகவும் ஒரே நேரத்தில் பயன்படும் புதிய மொபைல் டிவைஸ் ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

    செல்போன் சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனம் சாம்சங். இந்நிறுவனம் விரைவில் கேலக்ஸி எஃப் என்ற புதிய போனை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த ஃபோனை ஒரு டேப்லெட்டாகவும், பின்பு அதையே மடித்து ஒரு மொபைல் ஃபோனாகவும் பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து சாம்சங் நிறுவனம் ஃபோல்டிங் டிஸ்ப்லே என்று சொல்லக்கூடிய மடித்து பயன்படுத்தக்கூடிய மொபைல் ஃபோன்களை தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஏற்கெனவே இதுபோன்ற ஒரு மாடலை அந்நிறுவனம் ஒரு சர்வதேச கண்காட்சியில் காட்சிக்கு வைத்தது குறிப்பிடத்தக்கது. யூம் என்று பெயரிடப்பட்ட அந்த டிவைஸ் மெலிதான ஓஎல்ஈடி டிஸ்பிலே கொண்டது.

    சாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய மொபைலின் கான்ஸெப்ட் வடிவம்,


    சமீபத்தில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சாம்சங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டி.ஜெ.கோ, விரைவில் இந்த கேலக்ஸி எஃப் என்று பெயரிடப்பட்டுள்ள, டேப்லட்டோடு கூடிய மொபைல் ஃபோனை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்தார். இந்த ஃபோன் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சாம்சங் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேலக்ஸி எஃப் குறித்த வீடியோக்கள்:


    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Foldabe Smartphone, Samasung Galaxy F, Samsung

    அடுத்த செய்தி