முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / 6 மணிக்கு மேல வேலை செய்யமாட்டேன் பாஸ்... ஓவர்டைம் பார்த்தால் கழண்டு ஓடும் சூப்பர் மவுஸ் அறிமுகம்..

6 மணிக்கு மேல வேலை செய்யமாட்டேன் பாஸ்... ஓவர்டைம் பார்த்தால் கழண்டு ஓடும் சூப்பர் மவுஸ் அறிமுகம்..

சாம்சங் மவுஸ்

சாம்சங் மவுஸ்

பல ஊழியர்கள் அதிக வேலை செய்வதால் அவர்களின் உடல்நலம் மற்றும் உறவுகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இன்றைய சூழலில் வேலை நேரம் என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது. 8 மணி நேரம் தான் வேலை என்று சொல்லும் பல நிறுவனங்களில் 8 மணி நேரத்தில் வேலை முடிவதில்லை. டெட் லைன் நோக்கி ஓடும் நேரத்தில் வேலை 10 -12 மணிநேரம் என்று ஆகிறது. இந்த வேலை நேர இழுபறியால் மனிதனின் சாதாரண வாழ்க்கை பாதிக்கிறது.

கார்ப்பரேட் வட்டாரங்களில் வேலை-வாழ்க்கை சமநிலை என்பது மிகவும் விவாதத்திற்குரியதாக உள்ளது. பல ஊழியர்கள் அதிக நேரம்   வேலை செய்வதால் அவர்களின் உடல்நலம் மற்றும் உறவுகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர்.

கோவிட்-19 தொற்றுக்கு பின் அலுவலகத்திற்கு போகாமல்  வீட்டிலிருந்து வேலை என்று மாறியதால், தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரத்தை குறைத்து அதிக வேலை செய்யும் நிலை சகஜ நிலையாக மாறிவிட்டது.

ஸ்டடிஸ்டா நிறுவன 2021 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள பெண் பணியாளர்கள் சுமார் 37 சதவீதம் பேர் மோசமான வேலை-வாழ்க்கை சமநிலை காரணமாக தங்களது தற்போதைய வேலையை விட்டுவிட விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கான கார்டூனில் ஓர் பாலின ஜோடியின் சித்திரங்கள்

ஆண்களின் விகிதம் 28 சதவீதத்திற்கு சற்று குறைவாக இருந்தது. ஆனால் இது பணியாளர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. இதை சரி செய்ய சாம்சங் ஒரு முயற்சி எடுத்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் ‘பேலன்ஸ் மவுஸ்’, எனும் கணினி மவுஸை வெளியிட்டுள்ளது. இந்த மவுஸின் சிறப்பம்சம் என்னவென்றால், திட்டமிடப்பட்ட அலுவலக நேரத்திற்குப் பிறகு மவுஸ் தானே வேலை செய்வதை நிறுத்திவிடும். இதன்மூலம் பயனர்கள் வேலை நேரம் தண்டி அதிக வேலை செய்வதை இந்த சாதனம் தடுக்கிறது.

இந்த கொரிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பயனர் வேலை நேரத்தை மீறி பணி செய்ய முற்படும்போது கணினி மவுஸ் மேசையிலிருந்து ஓடுவதைக் காட்சி படுத்தி வெளியிட்டுள்ளனர்.

' isDesktop="true" id="800859" youtubeid="hPqdHVVJlYM" category="technology">

கொரிய நிறுவனத்தால் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு நபர் தனது நியமிக்கப்பட்ட அலுவலக நேரம் முடியும் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்ய முயல்கிறார். ஆனால் நேரம் ஆனதும் இந்த மவுஸ் வேலை செய்வதை நிறுத்தி விடுகிறது. அதை மீறி வேலை செய்ய முயன்றால் மேசையை விட்டு ஓடி விடுகிறது.

இந்த கிரியேட்டிவ் மவுஸ் கை அசைவைக் கண்டறிந்து செயல்படும். வேலை நேரம் முடிந்த பின்னரும்  கை அசைவுகள் இருந்தால் அதன் உள்ளே உருகும் சக்கரங்கள் வெளியே வந்து அது ஓடிவிடும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. மவுஸை வலுக்கட்டாயமாகப் பிடிக்க முயற்சித்தால் அது தன்னை மையப் பகுதியிலிருந்து பிரித்துகொண்டு அந்த இடத்தை விட்டே ஓடிவிடுகிறது

First published:

Tags: Samsung, Technology