ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி நோ டென்ஷன்.. பக்கா சேஃப்.. சர்வீஸ் சென்டர்ல தைரியமா ஃபோனை கொடுக்கலாம்.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்த சாம்சங்

இனி நோ டென்ஷன்.. பக்கா சேஃப்.. சர்வீஸ் சென்டர்ல தைரியமா ஃபோனை கொடுக்கலாம்.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்த சாம்சங்

மெயின்டனன்ஸ் மோட்

மெயின்டனன்ஸ் மோட்

மொபைல் ஓரளவு ஒர்கிங் கன்டிஷனில் இருந்தால் டேட்டாக்களை பேக்கப் எடுத்து கொண்டு, ரிப்பேராக உள்ள டிவைஸில் இருக்கும் டேட்டாக்களை டெலிட் செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று நம் அனைவரது கைகளிலும்  இருக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது ஸ்மார்ட்ஃபோன். வேறு ஏதேனும் டிவைஸ் ரிப்பேரானால் உடனடியாக தயங்காமல் சர்விஸ் சென்டருக்கு கொடுக்கும் மக்கள், மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுக்க தயங்கும் நிலை இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் ஃபோட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட பல முக்கிய டேட்டாக்கள் மொபைல்களில் ஸ்டோராகி இருப்பது தான். இவை தவிர பல தனிப்பட்ட தகவல்களும் இப்போது மொபைல்களில் சேமித்து வைக்கப்படுவதால் வேறு நபர்களின் கைகளுக்கு டேட்டாக்கள் சென்று விடுமோ என்ற அச்சம் எழுகிறது. மொபைல் ஓரளவு ஒர்கிங் கன்டிஷனில் இருந்தால் டேட்டாக்களை பேக்கப் எடுத்து கொண்டு, ரிப்பேராக உள்ள டிவைஸில் இருக்கும் டேட்டாக்களை டெலிட் செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

ஆனால் டெலிட் செய்த ஃபைல்களை ரெக்கவரி செய்து எடுத்து விடும் அபாயமும் ஒருபக்கம் இருக்கிறது. இதனிடையே பிரபல மொபைல் நிறுவனமான சாம்சங் இதற்கு ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளது. இதற்காக சாம்சங் நிறுவனம் One UI 5 இன்ஸ்டால் செய்யப்பட்ட தனது கேலக்ஸி டிவைஸ்களுக்கு புதிய மோட் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. மெயின்டனன்ஸ் மோட் (Maintenance Mode) எனப்படும் இந்த புதிய அம்சம் மொபைலை சர்விஸுக்கு கொடுக்கும் போது யூஸர்களின் பர்சனல் டேட்டாவை பாதுகாக்கும்.

Read More : EB பில் இப்படியும் கட்டலாமா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

இந்த புதிய Maintenance Mode-ஆனது யூஸர்களின் ஃபோட்டோக்கள், மெசேஜ்கள் அல்லது கான்டாக்ட்ஸ் போன்ற தனிப்பட்ட தகவல்களுக்கான வெளிநபர்களின் அணுகலை தடுக்கும். இது தொடர்பான அறிக்கை ஒன்றில் Samsung Electronics நிறுவனமானது, "கேலக்ஸி யூஸர்கள் தங்கள் மொபைலை வேறு யாரிடமாவது ஒப்படைத்தாலும் கூட, அவர்களின் பிரைவஸியை Maintenance Mode-ஆல் திறம்பட பாதுகாக்க முடியும் என நாங்கள் உறுதி அளிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

கிரெடிட் கார்டு தகவல் முதல் தனிப்பட்ட ஃபோட்டோக்கள் வரை நமது முழு வாழ்க்கையும் நாம் வைத்திருக்கும் மொபைல்களில் உள்ளது. சாம்சங் அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய அம்சம் வேறு வழின்றி மொபைலை வெளிநபர்களிடம் ஒப்படைக்கும் யூஸர்களின் பிரைவசி மற்றும் மொபைலை பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கும் என சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் மொபைல் எக்ஸ்பீரியன்ஸ் பிசினஸின் வைஸ் பிரசிடென்ட் மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவரான Seungwon Shin கூறியுள்ளார்.

யூஸர் தனது சாம்சங் கேலக்ஸி மொபைலில் Maintenance Mode-ஐ ஆக்டிவேட் செய்யும் போது ஒரு யூஸர் ப்ரொஃபைலை உருவாக்குகிறது. இந்த ப்ரொஃபைலில் மெசேஜ்கள், ஃபோட்டோக்கள் மற்றும் யூஸர் டேட்டாவிற்கான அக்சஸ் போன்ற அனைத்து முக்கிய பயன்பாடுகளையும் ஹைட் (hide) செய்கிறது. இதனால் யூஸ்ர்களின் முக்கிய டேட்டாக்கள் பாதுகாப்பாக இருக்கும் என்கிறது சாம்சங்.

தற்போது One UI 5- இயங்கும் Galaxy S22 டிவைஸ்களுக்கு படிப்படியாக இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், 2023 இறுதிக்கும் அனைத்து Galaxy டிவைஸ்களுக்கும் கிடைக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

Maintenance Mode-ஐ எப்படி ஆக்டிவேட் செய்வது?

சாம்சங் கேலக்ஸி டிவைஸின் Settings-க்குள் சென்று Battery and device care-ஐ செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது Maintenance Mode-ஐ செலக்ட் செய்ய வேண்டும்.
இறுதியாக டிவைஸை Reboot செய்யவும்..
டிவைஸை Reboot செய்தவுடன் அனைத்து முக்கிய டேட்டாக்களும் சேஃப்ட்டி மோட்-க்கு சென்று விடும். ஜூலை 2022-ல் கொரியாவில் Galaxy S21 சீரிஸில் வெற்றிகரமாக இந்த அம்சம் சோதனை செய்யப்பட்ட பிறகு Maintenance Mode செப்டம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உலகளவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Samsung, Technology