ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

PC-க்களுக்கான உலகின் முதல் Slidable Display-வை வெளிப்படுத்திய சாம்சங்.!

PC-க்களுக்கான உலகின் முதல் Slidable Display-வை வெளிப்படுத்திய சாம்சங்.!

சாம்சங்

சாம்சங்

Samsung Slidable PCs | சாம்சங்கின் Slidable Display மூலம் சிறியதாக இருக்கும் PC-ன் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவை தேவைக்கேற்ப இழுத்து சற்று பெரியதாக்கி கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்டெல் நிறுவனம் அதன் இன்னோவேஷன் 2022 நாள் நிகழ்வை சமீபத்தில் நடத்தியது. இந்த நிகழ்வில் அங்கு டெஸ்க்டாப்பிற்கான 13-வது தலைமுறை இன்டெல் கோர் ப்ராசஸர்களை (13th-gen Intel Core processors) அறிமுகப்படுத்தியது.

இதே நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது மற்றுமொரு வித்தியாசமான தயாரிப்பை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே ஃபோல்டபில் போன்களை (Foldable Phones) அறிமுகபடுத்தி வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படுத்திய சாம்சங் நிறுவனம் தற்போது பர்சனல் கம்பியூட்டர் (PC) செக்மென்ட்டில் '17- இன்ச் ஸ்லைடபில் டிஸ்ப்ளேவை" காட்சிப்படுத்தி உள்ளது.

அதாவது சாம்சங்கின் Slidable Display மூலம் சிறியதாக இருக்கும் PC-ன் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவை தேவைக்கேற்ப இழுத்து சற்று பெரியதாக்கி கொள்ளலாம். தற்போது இன்டெல் இன்னோவேஷன் 2022 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்லைடபில் டிஸ்ப்ளே ஸ்க்ரீன் 13-இன்ச் பேனல் ஆகும். இதை பக்கவாட்டில் கையை வைத்து இழுப்பதன் மூலம் 17-இன்ச் டிஸ்ப்ளேவாக மாற்றி கொள்ள யூஸர்களை அனுமதிக்கிறது. இதற்கு முன் கடந்த மே 2022-ல் சாம்சங் நிறுவனம் 6.7-இன்ச் ஸ்லைடபிள் OLED டிஸ்ப்ளேவை காட்சிப்படுத்தி இருந்தது.

இந்நிலையில் Samsung Display-வின் தலைமை நிர்வாக அதிகாரியான JS Choi, தங்களது நிறுவனத்தின் இந்த புதிய மற்றும் வித்தியாசமான டிஸ்ப்ளே ஸ்கிரீனை இன்டெல் இன்னோவேஷன் 2022 நிகழ்வின் போது மேடையில் அறிமுகப்படுத்தி Slidable Display-வை எப்படி பெரிய ஸ்கிரீனாக மாற்றுவது என்பதை செய்தும் காட்டினார். மேடையில் அவர் கையில் வைத்திருந்த டேப்லெட் போன்ற டிவைஸ் 13 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருந்தது. அதை அவர் இழுத்த பின்பு கிடைமட்டமாக 17 இன்ச்-ஆக விரிவடைகிறது. வீடியோ கீழே:

Also Read : இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை தொடங்கும் ஆப்பிள் - விலை குறையுமா.?

இந்த புதிய டெக்னலாஜி பற்றி பேசிய JS Choi, டேப்லெட்-எஸ்க்யூ (tablet-esque) டிசைன்களை வழங்கும் கம்ப்யூட்டர்ஸ்களுக்காக ஸ்லைடபில் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றார். தங்களது இந்த புதுமையான தயாரிப்பை "சர்வதேச அளவில் PC-க்களுக்கான உலகின் முதல் 17 இன்ச் ஸ்லைடபில் டிஸ்ப்ளே" என்று JS Choi குறிப்பிட்டு உள்ளார். Intel நிறுவனத்துடன் சேர்ந்து புதிய இன்டர்ஃபேஸ் மோடஸ்களுடன் இந்த புதிய டெக்னலாஜி டிஸ்ப்ளேவை மேலும் அப்கிரேட் செய்வதில் வேலை செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார். இந்த ஸ்லைடபில் பிசி டிவைஸானது பெரிய திரை மற்றும் போர்ட்டபிலிட்டி ஆகிய இரண்டின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Also Read : இனி பாஸ்வோர்ட் இல்லாமல் உள்நுழையலாம்.. ஓப்போவின் புதிய அம்சம்!

இதற்கிடையே இந்த ஸ்லைடபில் பிசி டெக்னலாஜி எப்போது தயாரிப்பாக வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கு வரும் என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும் பிசி தொழிற்துறையானது பாரம்பரிய கிளாம்ஷெல் மடிக்கணினிகளை தாண்டி கீபோர்டு மற்றும் திரையுடன் இணைக்கப்பட்ட புதிய ஹார்டுவேரை உருவாக்க எவ்வாறு முயற்சிக்கிறது என்பதை இந்த டிசைன் காட்டுகிறது. இதனிடையே பிரீமியம் பிசி-க்கள் பட்ஜெட் பிசி-க்களை விட சிறப்பாக செயல்படுகின்றன என்று இன்டெல்லின் பிசி சிப் குழுமத்தின் தலைவரான மிச்செல் ஜான்ஸ்டன் இந்த நிகழ்வில் பேசும் போது குறிப்பிட்டார்.

Published by:Selvi M
First published:

Tags: Samsung, Technology