Home /News /technology /

நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது

நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது

 சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

Fan Edition என்று கூறப்படும் சாம்சங் கேலக்சி S21 FE, Galaxy S21 ஃபிளாக்ஷிப் மாடல்களுடன் சேர்த்து, அதன் பல்வேறு முக்கிய அம்சங்களை ஒன்றாகக் கொண்டுவரும் முயற்சியின் வெளிப்பாடு ஆகும்.

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர் கூட்டம் உள்ளது. எந்த புதிய மாடல் அறிமுகம் ஆனாலும் அல்லது அப்டேட் என்றாலுமே சாம்சங் போன் விரும்புபவர்ககுக்கு கொண்டாட்டமாக இருக்கும். சாம்சங் கேலக்சி S21 FE 5G ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் சில மாதங்களுக்கு முன்னரே தகவல்களை வெளியிட்டது. பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டாலும், இந்த மாடலை வெளியிட நீண்ட காலம் ஆனது. தனது கேலக்சி S20 FE மாடலுக்கு மாற்றாக இந்த 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டது சாம்சங் நிறுவனம்.

Fan Edition என்று கூறப்படும் சாம்சங் கேலக்சி S21 FE, Galaxy S21 ஃபிளாக்ஷிப் மாடல்களுடன் சேர்த்து, அதன் பல்வேறு முக்கிய அம்சங்களை ஒன்றாகக் கொண்டுவரும் முயற்சியின் வெளிப்பாடு ஆகும். குவால்காமின் ஸ்னாப்டிராகன் 888 சிப், 120 Hz உயர் புதுப்பிப்பு விகிதம் டிஸ்ப்ளே, 5ஜி இணைப்பு, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் IP68 வாட்டர் மற்றும் தூசு எதிர்ப்பு ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் குறிபிடத்தக்க சிறப்பு அம்சங்களாகும்.

இதன் டிஸ்ப்ளேவைப் பொறுத்தவரை, ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனருடன் கூடிய ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே 6.4-இன்ச் திரை உள்ளது. மேலும், 8 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி (விரிவாக்கக்கூடிய) ஸ்டோரேஜ் உள்ளது. சமீபத்திய ஆண்ட்ராய்டு வெர்ஷனான OS 12-அடிப்படையிலான One UI 4.0 மென்பொருள் இதன் OS ஆக பொருத்தப்பட்டுள்ளது. 15 W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 4,50 0mAh பேட்டரியில் இயங்குகிறது.

ALSO READ |  விரைவில் அறிமுகமாகிறது OnePlus 10 Pro ஸ்மார்ட் ஃபோன்.. சிறப்பம்சங்கள் என்ன.?

கேலக்சி S21 FE போனில் 12 MP லென்ஸ் கொண்ட பிரைமரி கேமரா, 12 MP வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 MP டெலிஃபோட்டோ கேமரா என்று மூன்று விதமான கேமராக்கள் உள்ளன. ஏற்கனவே S21 சீரிஸில் இருப்பது போலவே, இந்த மாடலிலும் பிரைமரி லென்ஸ் மற்றும் வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளன. இந்த மாடலின் டிஸ்ப்ளே தட்டையானது மற்றும் Super AMOLED அம்சம் கொண்டிருந்தாலும் 1080p+ வரை டோன் டவுன் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாம்சங்கின் Infinity-O பன்ச்-ஹோல் கட்டவுட்டையும் கொண்டுள்ளது.

S21 FE பாலிகார்பநேட்டால் கட்டமைக்கப்பட்ட மேட் பூச்சுடன், ஆலிவ், லாவெண்டர், வெள்ளை மற்றும் கிராஃபைட் என்ற நான்கு வண்ணங்களில் வருகிறது.

கேலக்சி S21 FE போனின் ஆரம்ப விலை ரூ. 52,128. ஏற்கனவே ஆப்பிளும், சாம்சங்கும் சந்தையில் மோதிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த மாடல் சாம்சங்கிற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஸ்டாண்டர்டு ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மினி ஆகியவை தற்போது ஒரே விலையில் கிடைக்கின்றன. மேலும், ஆப்பிள் நிறுவனம் 5ஜி இணைப்புடன் கூடிய ஒரு குறைந்த விலை ஐபோன் 5E ஐ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 11 முதல் சந்தையில் கிடைக்கும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Samsung, Smartphone

அடுத்த செய்தி