முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்தியர்களின் மனங்களை வென்ற ஸ்மார்ட்போன் இதுதான்! - காரணம் தெரியுமா?

இந்தியர்களின் மனங்களை வென்ற ஸ்மார்ட்போன் இதுதான்! - காரணம் தெரியுமா?

சாம்சங்

சாம்சங்

Samsung : இந்தியாவில் அதிக அளவு போன்களை விற்று முதல் இடத்தை தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் பிடித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளது. அதே சமயம் முதலிடத்தில் இருந்துவந்த சீனாவின் Xiaomi நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு பிறகு அதன் தரவரிசையான முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் அதிகப்படியான போட்டி மற்றும் மொபைல் வாடிக்கையாளர்களின் தேவை மாறியுள்ளதாலும் இந்த நம்பர் 1 இடத்தை Xiaomi இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, Canalys மற்றும் Counterpoint ஆய்வுகளின்படி, சாம்சங் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் அல்லது 2022 ஆம் ஆண்டின் Q4 இல் சீன மொபைல் தயாரிப்பாளரான Xiaomi ஐப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது. இந்திய சந்தையில் காலாண்டிற்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி குறைந்ததால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் முதலிடம் பிடித்த சாம்சங் நிறுவனம்:

தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 21% பங்குகளை வைத்துள்ளது. சுமார் 6.17 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ள இந்த நிறுவனம் இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளது. அதேபோல Vivo நிறுவனம் 6.4 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

முதலிடத்தில் இருந்துவந்த சீனாவின் Xiaomi நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு பிறகு அதன் தரவரிசையான முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 5.4 மில்லியன் யூனிட்களுடன் Oppo நிறுவனமும் நான்காவது இடத்தையும், ஐந்தாவது இடத்தை 2.7 மில்லியன் யூனிட்களுடன் Realme நிறுவனம் பிடித்துள்ளது.

Xiaomi -யின் பங்குகள் சரிய என்ன காரணம்?

கடந்த காலாண்டு (Q4-2022) விற்பனைக்கு முன்னதாக சீனாவின் Xiaomi நேரடி விற்பனையில் அதிகம் கவனம் செலுத்தாமல் ஆன்லைன் விற்பனையில் அதிகம் கவனம் செலுத்தியது. ஆன்லைனில் பண்டிகை கால விற்பனை சரி வர நடக்காமல் போனதால் அந்த நிறுவனத்தின் மொபைல் போன்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவே இந்த நிறுவனம் சந்தையில் பின்னுக்கு தள்ளப்பட்ட காரணம் என கூறப்படுகிறது. ஆனால் ஓப்போ மற்றும் விவோ ஆகிய நிறுவனங்கள் நேரடி ஷோரூம்களில் அதிக அளவு போன்களை விற்பனை செய்ததால் பல வாடிக்கையாளர்களை நேரடியாக ஈர்த்துள்ளது. இருந்தாலும் கடந்த ஆண்டு மொத்தமாக இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை 27% குறைந்துள்ளது.

Also Read : Twitter Blue : ட்விட்டர் ப்ளூ டிக் பெற புதிய சந்தா, விலை, திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள்!

இந்த ஆண்டு விற்பனையிலும் Xiaomi ஏற்கனவே களமிறங்கியுள்ள நிலையில் அதன் புதிய Redmi Note 12 -ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதே சமயம் சாம்சங் தனது தயாரிப்பு வரிசையை விரிவுப்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் விதவித மாடல்களை குறைந்த விலையில், தனது போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களை அதிகரிக்க செய்துள்ளது.

First published:

Tags: China, Samsung, South Korea, Xiaomi