Home /News /technology /

சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்... இனி இந்த மாடல்கள் விற்பனை இல்லை

சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்... இனி இந்த மாடல்கள் விற்பனை இல்லை

சாம்சங் மொபைல்

சாம்சங் மொபைல்

Samsung Mobile | மார்ச் இறுதி வரை சாம்சங்கின் அடிப்படை ஃபோன் பிரிவு மதிப்பில் வெறும் 1 சதவீதம் மட்டுமே பங்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    தென் கொரியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் தற்போது இந்தியாவில் குறைந்த விலை உள்ள ஸ்மார்ட் போன்களின் விற்பனை சந்தையில் இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இது பல நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் இருந்து வருகிறது. ஆனால், சாம்சங் பிராண்ட் விரும்பிகளுக்கு இது ஒரு அதிர்ச்சியான தகவலாக இருக்க கூடும்.

    சாம்சங் வெளியிட்ட இந்த அறிக்கையின்படி, சாம்சங்கின் கடைசி பேட்ச் குறைந்த விலை போன்கள் இந்த ஆண்டு டிசம்பரில் டிக்ஸனால் தயாரிக்கப்பட உள்ளது. அதன்பிறகு, இந்நிறுவனம் இந்தியாவில் எந்த ஒரு ஃபீச்சர் போன்களையும் தயாரிக்காது என்று கூறியுள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தனது கவனத்தை அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன்களிடம் கொண்டு செல்ல போவதாக தெரிவித்துள்ளது. எனவே, இந்த அறிவிப்பை அடுத்து சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன்களின் விலையை பெரும்பாலும் ரூ. 15,000ல் இருந்து முன்னோக்கி நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசாங்கத்தின் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production-Linked Incentive) திட்டத்தில் பங்களிக்கும் இரண்டு பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் சாம்சங் நிறுவனமும் ஒன்றாகும். எனவே, ரூ. 15,000 விலைக்கு மேல் மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்ய போவதாக தெரிகிறது. இந்த அறிவிப்பு குறித்து சாம்சங் நிறுவனம் தனது சேனல் கூட்டாளர்களிடம் பேசியபோது சிலவற்றை குறிப்பிட்டனர். அதில், "அடுத்த சில மாதங்களில் அல்லது இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்த விலை கொண்ட போன்களை தயாரிக்கும் வணிகத்திலிருந்து வெளியேற உள்ளோம்" என்று கூறியுள்ளது.

    Also Read : Motorola Edge 30 இந்திய விற்பனை ஆரம்பம் - என்ன விலை.? என்னென்ன சலுகைகள்.?

    இது போன்று குறைந்த விலை போன்களின் உற்பத்தியானது இந்தியாவில் குறைந்து வருகின்றன. கவுண்ட்டர் பாயிண்ட் ஆய்வு அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 39 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சந்தையில் முன்னணியில் இருந்த சாம்சங், இப்போது குறைந்த விலை போன்களின் சந்தையில் Itel மற்றும் Lava ஐ விட பின்தங்கியுள்ளது என்று இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

    மார்ச் இறுதி வரை சாம்சங்கின் அடிப்படை ஃபோன் பிரிவு மதிப்பில் வெறும் 1 சதவீதம் மட்டுமே பங்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்நிறுவனம் இரட்டை இலக்கங்களில் வளர்ச்சியடையும் என்று சாம்சங் நிர்வாகிகள் தெரிவித்தனர். 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 22 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு சாம்சங் சிறந்த விற்பனையான பிராண்டாக இருந்தது. இதன் மூலம் ஜியோமி நிறுவனம் ஆண்ட்ராய்டு பிரிவில் விற்பனை சந்தையில் முன்னிலையில் உள்ளது. ஜியோமி நிறுவனத்தின் பட்ஜெட்டு போன்கள் சிறப்பாகவும் அதிக வசதிகளையும் கொண்டுள்ளதாகவும் உள்ளதால் மக்கள் இதை நோக்கி செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் சந்தையை ஜியோமி நிறுவனம் இந்தியாவில் கைப்பற்றி வருவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Samsung

    அடுத்த செய்தி