64 மெகா பிக்சல் கேமிரா உடன் புதிய சாம்சங் கேலக்ஸி A சீரிஸ்!

இந்த A70S ஃபோனின் விலை 27,300 ரூபாய் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்கிறது.

Web Desk | news18
Updated: August 5, 2019, 12:22 PM IST
64 மெகா பிக்சல் கேமிரா உடன் புதிய சாம்சங் கேலக்ஸி A சீரிஸ்!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: August 5, 2019, 12:22 PM IST
ஸ்மார்ட்ஃபோன்களின் கேமிரா திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 64 மெகாபிக்சல் கொண்ட கேமிரா உடன் புதிய A சீரிஸ் ஸ்மாட்ஃபோன்களை அறிமுகப்படுத்த சாம்சங் தயாராகி வருகிறது.

சமீபத்தில்தான் 64 மெகாபிக்சல் கேமிரா உடனான ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்ய உள்லதாக ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டன. இந்த வரிசையில் மூன்றாவதாக சாம்சங் இணைந்துள்ளது. ஆனால், ரெட்மி, ரியல்மியை முந்தி வருகிற செப்டம்பர் மாதம் இந்த ஃபோன் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், சாம்சங் கேலக்ஸி A70S ஸ்மார்ட்ஃபோன்தான் இந்தியாவின் முதல் 64 மெகாபிக்சல் திறன் கொண்டு வெளியாகும் ஃபோன் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பெரிய மாற்றங்கள் இன்றி கேமிரா திறன் மட்டுமே மேம்படுத்தப்பட்டு வெளியாகும் இந்த A70S ஃபோனின் விலை 27,300 ரூபாய் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்கிறது.

ரியல்மி மற்றும் ரெட்மி ஆகிய நிறுவனங்கள் இதுபோன்றதொரு ஃபோனை சீனாவில்தான் அறிமுகம் செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பார்க்க: சுழலும் கேமிரா உடன் விற்பனைக்கு வந்துள்ளது சாம்சங் கேலக்ஸி A80!
First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...