Home /News /technology /

ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை... சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை... சிறப்பம்சங்கள் என்னென்ன?

சாம்சங்

சாம்சங்

Samsung In TamilNadu | தென் கொரியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தமிழ்நாட்டில் மேலும் ஒரு தொழிற்சாலையை நிறுவ உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீட்டில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தலைவர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

தென் கொரியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தமிழ்நாட்டில் மேலும் ஒரு தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சாம்சங் தலைமை நிர்வாக அதிகாரி கென் காங் முன்னிலையில் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக இயக்குநர் பூஜா குல்கர்னி, மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டி.ஆனந்த், சாம்சங் சென்னை தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் பியோங்ஜின் காங் ஆகியோரும் பங்கேற்றனர்.

உலகம் முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட் போன் விற்பனை செய்யும் டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் சாம்சங் இடம் பிடித்துள்ளது.

ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூரியில் இயங்கி வரும் ஆலையில் இருந்து லைப் ஸ்டைலில் டி.வி. புதிய வகை கர்ட் மோஸ்ட்ரோ ரெஃப்ரிஜிரேட்டர்கள், ஏஐ எகோபபுள் வாஷிங் மெஷின்கள் மற்றும் விண்ட்ஃப்ரீ ஏசி உள்ளிட்ட முக்கிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, 200,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் மேலும் ஒரு ஆலையை சாம்சங் நிறுவனம் அமைக்க உள்ளது வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1, 588 கோடி ரூபாய் முதலீட்டுடன் கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஸ்ரீபெரும்புதூரில் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான புதிய கம்ப்ரசர் ஆலை அமைக்கப்பட்ட உள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் ஆலை அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த ஆலை மூலமாக ஆண்டுக்கு 8 மில்லியன் கம்ப்ரசர் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கம்பரஸர்களை குளிர்சாதன பெட்டிகளில் பொருத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Also read... உங்கள் விண்டோஸ் லேப்டாப்பில் உடனுக்குடன் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விடுகிறதா - இந்த டிப்ஸ்களை முயற்சித்து பாருங்கள்

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் உங்கள் தயாரிப்பு வரிசையை பல்வகைப்படுத்தி, மேலும் விரிவாக்கம் செய்யுங்கள் என்று சாம்சங் நிர்வாகத்தினை நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டத்தினை நிறுவிட வேண்டும், இந்தத் தருணத்தில், சாம்சங் நிர்வாகத்தினை நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இதற்கான அனைத்து உதவிகளையும் செய்திட மாநில அரசு தயாராக இருக்கிறது என்று உங்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் அதிக அளவில் முதலீடுகளை செய்து வரும் சாம்சங் நிறுவனத்தை மேலும் முதலீட்டை அதிகரிக்க வலியுறுத்துவது போல் அமைந்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Samsung

அடுத்த செய்தி