219 இன்ச் டிவி-யை களம் இறக்கியுள்ளது சாம்சங்

CES 2019 என்னும் சர்வதேச எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களின் கண்காட்சி ஜனவரி 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற உள்ளது.

219 இன்ச் டிவி-யை களம் இறக்கியுள்ளது சாம்சங்
சாம்சங் (Representative Image: Samsung)
  • News18
  • Last Updated: January 7, 2019, 6:27 PM IST
  • Share this:
219 இன்ச் மைக்ரோ எல்.இ.டி. டிவி-யை அமெரிக்க எலெக்ட்ரானிக் கண்காட்சியில் சாம்சங் அறிமுகம் செய்கிறது.

CES 2019 என்னும் சர்வதேச எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களின் கண்காட்சி ஜனவரி 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு எலெக்ட்ரானிக் நிறுவனங்களின் புதிய அறிமுகங்கள் குறித்த அறிவிப்புகள், வெளியீடுகள் நடப்பது வழக்கம். இந்தாண்டு நடக்கும் கண்காட்சி விழாவில் சாம்சங் நிறுவனம் சார்பில் 219 இன்ச் டிவி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கடந்த ஆண்டு 146 இன்ச் டிவி-யை அறிமுகப்படுத்தியது சாம்சங். இந்தாண்டு சற்று மிரட்டலாக அறிமுகமாகியுள்ள 219 இன்ச் டிவியில் கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் அமேசான் அலெக்சா ஆகியவையும் இணைந்துள்ளது. மைக்ரோ எல்.இ.டி. உடன் 4K ரெசொலியூசன் என உள்ளது. இதுவரையில் சாம்சங் விலைப்பட்டியல் குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.


மேலும் பார்க்க: ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் தினகரன் குடும்பத்தினர் தான்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
First published: January 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading