சிறிய சந்தைகளுக்கு சாம்சங் கேலக்ஸி Fold தாமதமாகவே வெளியாகும்!

7nm Qualcomm Snapdragon 855 octa-core திறன் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடனுன் இந்த Galaxy Fold வருகிறது.

Web Desk | news18
Updated: July 27, 2019, 3:06 PM IST
சிறிய சந்தைகளுக்கு சாம்சங் கேலக்ஸி Fold தாமதமாகவே வெளியாகும்!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 27, 2019, 3:06 PM IST
சாம்சங் கேலக்ஸி சாம்சங் கேலக்ஸி Fold ஸ்மார்ட்ஃபோன் சிறிய சந்தைகளிலிருந்து வெளியாவதில் தாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தாமத்ததுக்குப் பின் சாம்சங் கேலக்ஸி Fold செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சாம்சங்-ன் மிகப்பெரும் சந்தைகளான அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் மட்டுமே முதற்கட்டமாக சாம்சங் கேலக்ஸி Fold வெளியாக உள்ளது.

இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் முக்கிய சந்தைகள் என்றபோதும் வெளியீட்டுப் பட்டியலில் இந்த நாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி Fold ஃபோனில் பல பிரச்னைகள் எழுந்ததால் வெளியாவதில் தாமதமானது.
தற்போது வடிமைப்பிலும் கட்டமைப்பிலும் மேம்பாடு செய்யப்பட்டிருப்பதால் இனி பிரச்னை ஏதும் எழாது என சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும், ஃபோனின் மேல் மற்றும் கீழ் பாகங்கள் உடையாதவாறு பாதுகாப்புக் கவசம் போன்ற இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

7nm Qualcomm Snapdragon 855 octa-core திறன் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடனுன் இந்த Galaxy Fold வருகிறது. பின்புறத்தில் 16+12+12 மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமிராக்களும் 10மெகாபிக்சல் செலஃபி கேமிராவும் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: விவோ Z1 ப்ரோ விற்பனை தொடங்கியது... ஃப்ளிப்கார்டில் வாங்கினால் கேஷ்பேக் ஆஃபர்..!
First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...