புதிய அப்டேட் வெளியிட்ட சாம்சங்... விரல்நுனி சென்சார் ‘பக்’ நீக்கம்!

”வாடிக்கையாளர்கள் சேவை ஆப் வழியாக சாம்சங் தனது வாடிக்கையாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளது”

புதிய அப்டேட் வெளியிட்ட சாம்சங்... விரல்நுனி சென்சார் ‘பக்’ நீக்கம்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: October 24, 2019, 4:08 PM IST
  • Share this:
சாம்சங் கேலக்ஸி S10 மற்றும் நோட் 10 ஆகிய இரு ஸ்மார்ட்போன்களிலும் உள்ள விரல்நுனி சென்சார் தொடர்பான ‘பக்’ ஒன்றை சரி செய்ய புதியதொரு அப்டேட் ஒன்றை சாம்சங் வெளியிட்டுள்ளது.

சாம்சங் வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அதற்கான தீர்வாக அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. விரல்நுனி சென்சார் மூலம் ஸ்மார்ட்போனை லாக் செய்தால் அநாவசிய பேட்டர்ன் முறைகள் தெரிவதாகவும் புகார் எழுந்திருந்தது.

இதனால் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாம்சங் பயோமெட்ரிக் செயல்பாட்டை மேம்படுத்தியுள்ளது.


இதன் மூலம் சிலிகான் ப்ரொடெக்டர் கொண்டு போன் லாக் திறக்கும் முறைகேடு நிகழாது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சேவை ஆப் வழியாக சாம்சங் தனது வாடிக்கையாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் பார்க்க: தீபாவளி விற்பனையில் உங்களுக்கு ஏற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்..!

பிகில் ஸ்பெஷல் ஷோ ரத்து... விஜய் ரசிகர்களின் ரியாக்‌ஷன்
First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்