பொதுவாக நமது மொபைலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனே அதை அந்த சேவை மையத்தில் பழுது பார்ப்பதற்காக சமர்பிப்போம். இருப்பினும் இதுபோன்று கொடுக்கும் போது உள்ளுக்குள் ஒரு பயமும் இருக்கும். குறிப்பாக நமது தனிப்பட்ட தகவல்களை இவர்கள் திருடி விருவார்களோ என்கிற பயம் இருக்கும். உங்கள் மொபைலை முற்றிலும் பழுதுபார்ப்பதற்காக கொடுப்பதற்கு முன்பு நீங்கள் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. உங்கள் தனிப்பட்ட படங்கள், ஆவணங்கள் மற்றும் பிற முக்கியமான விஷயங்களை பாதுகாப்பாக இருக்கும்படி செய்ய வேண்டும்.
சிலர் பழுது பார்ப்பதற்காக கொடுக்கும் போது தனது எல்லா தரவுகளையும் நீக்கிவிட்டு தருவார்கள். இது சரியான முறை தான் என்றாலும், இது நிரந்தர தீர்வு கிடையாது. எனவே இது போன்ற நிலையில் தான் உங்கள் தரவை யாரேனும் பயன்படுத்துவார்களோ என்கிற பயம் உண்டாகும். இந்த பயத்தை போக்க சாம்சங் நிறுவனம் இப்போது ஒரு புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது, அது உங்கள் கவலைகளை போக்க உதவும்.
சமீபத்தில் சாம்சங் தந்த அறிக்கையின்படி, சாம்சங் ரிப்பேர் மோட் எனப்படும் புதிய தனியுரிமை அம்சத்தில் செயல்பட உள்ளதாம். இது குறித்து, சாம்சங் நிறுவனத்தின் கொரிய இணையதளத்தில் இதற்கான வளர்ச்சி முறைகளை கண்டறிந்துள்ளனர். இந்த பழுதுபார்க்கும் பயன்முறையானது (Repair Mode) உங்கள் மொபைலை பழுதுபார்க்க கூடிய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு குறிப்பிட்ட அனுமதியை மட்டுமே வழங்கும். எனவே பழுதுபார்க்கும் பயன்முறையை நீங்கள் ஆக்டிவ் செய்த உடன், உங்கள் படங்கள், செய்திகள் மற்றும் இதர கணக்குகள் அந்த பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து மறைக்கப்படும். எனவே தொழில்நுட்ப வல்லுநர்கள் உங்கள் ஃபோனை சரிசெய்ய போதுமான பெர்மிஷன்களை மட்டுமே பெறுவார்கள். இதன் மூலம் உங்களின் தரவுகளை அவர்களால் தரவாக பயன்படுத்த முடியாது.
சாம்சங் நிறுவனம் இந்த அம்சத்தை கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மொபைலுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. அதே போன்று இந்த அம்சத்தை மற்ற மொபைல் சீரிஸ்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்த, “Battery and Device Care” என்கிற ஆப்ஷனிற்கு சென்று அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது, தொலைபேசியை பழுதுபார்க்கும் உங்கள் படங்கள் மற்றும் தனிப்பட்ட தரவை தொழில்நுட்ப வல்லுநருக்கு தெரியாமல் மறைக்க செய்கிறது.
Also Read : ரூ.15,000-க்கு கீழ் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன் வேண்டுமா? இதோ லிஸ்ட்
எனவே, மொபைலை பழுதுபார்க்க வேண்டிய அடிப்படை விஷயங்களை மட்டுமே அவர்களால் அணுக முடியும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், பழுதுபார்க்கும் பயன்முறையை (Repair Mode) மொபைல் யூசரால் மட்டுமே இயக்க முடியும். மேலும் சாம்சங் நிறுவனம் அந்த மொபைல் பற்றிய விவரங்களை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எந்தெந்த நாடுகளில் இந்த அம்சம் வெளியிடப்படும் மற்றும் எந்தெந்த சாம்சங் மாடல்கள் இதை பெறும் என்பதை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இன்னும் வெளியிடவில்லை. இது குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் சில நாட்களில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.