ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேமிங் மானிட்டர் - விலை, அம்சங்கள்.!

நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேமிங் மானிட்டர் - விலை, அம்சங்கள்.!

சாம்சங் கேமிங் மானிட்டர்

சாம்சங் கேமிங் மானிட்டர்

Samsung Odyssey Ark Gaming Monitor | பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமாகவுள்ள சாம்சங் ஓடிஸி ஆர்க் கேமிங் மானிட்டரின் விலை மற்றும் என்னென்ன அம்சங்கள் இதில் உள்ளது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

QVGA தொழில்நுட்பம், 55 இன்ச் வளைந்த ஸ்கிரீன் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் ரூபாய் 2.19 லட்சம் விலையில் சாம்சங் கேமிங் மானிட்டர் அறிமுகமாகிறது.

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விட மற்ற தயாரிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. மொபைல் போன்களை விட மக்களும் சாம்சங் நிறுவனத்தின் பிற பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டிவரும் சூழலில் தற்போது தனது புதிய தயாரிப்பான சாம்சங் ஓடிஸி ஆர்க் கேமிங் மானிட்டரை (Samsung Odyssey Ark Gaming Monitor) தற்போது அறிமுகம் செய்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமாகவுள்ள இதன் விலை மற்றும் என்னென்ன அம்சங்கள் இதில் உள்ளது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

சாம்சங் ஓடிஸி ஆர்க் கேமிங் மானிட்டரின் அம்சங்கள்: (Samsung Odyssey Ark Gaming Monitor)

சாம்சங் கேமிங் மானிட்டர் 55 அங்குல வளைந்த திரையை கொண்டுள்ளது. இது அதிக புதுப்பிப்பு விகிதத்தில் 4k தெளிவுத்திறனை வழங்குவதோடு காட்சியை நமக்கு ஏற்றவாறு சுழற்றிக்கொள்ளும் வசதியுடன் வருகிறது. இதோடு பயனர்களுக்கு ஏற்றவாறு திரையை ஒளிரச் செய்வதற்கான சமீபத்திய லைட்டிங் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

QVGA தொழில்நுட்பம் மற்றும் மினி எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது. 14 பிட் VA QLED டிஸ்ப்ளே, HDR 10+, AMD பிரீசின்க் பிரீமியம் ப்ரோ, 165HZ ரிப்ரெஷ் ரேட், 1 மில்லி செகண்ட் கிரே-டு- கிரே ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் 4k ரெசல்யூசன் அம்சங்கள் உள்ளது. இதோடு கேம் பார் கொண்டு டிஸ்ப்ளே செட்டிங்களை மாற்றிக்கொள்ளவதோடு ஆக்டிவேட் செய்யப்பட்ட ஓடிசி ஆர்க் மூலம் நான்கு வீடியோ இன்புட்களை இயக்கக்கூடிய வசதிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் சாம்சங் கேமிங் ஹப் மூலம் அமேசான் லூனா, மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் கிளவுட் மற்றும் என்விடிய ஜீஃபோர்ஸ் உள்ளிட்டவைகளை இயக்க முடியும். இத்துடன் டால்பி அட்மோஸ், 60 வாட் 2.2.2 சேனல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

Also Read : பட்ஜெட் விலையில் லேப்டாப்.. 4ஜி கார்டுடன் வரும் ‘ஜியோபுக்’ விலை என்னத் தெரியுமா.? 

பல்வேறு வசதிகளுடன் இயக்கப்பட்ட இந்த மானிட்டர் டைசன் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இது ஆப்பிள் டிவி பிளஸ், டிஸ்னி பிளஸ், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்டவைகளுக்காகப் பயன்படுத்த முடியும். இத்துடன் அலெக்சா வசதியும் உள்ளது. மேலும் சாம்சங் ஹெல்த், ஸ்மார்ட்திங்ஸ், வைபை , மிராகேஸ்ட், ப்ளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப் சி கனெக்டர், ஈத்தர்நெட் போர்ட், நான்கு ஹெச்டிஎம்ஐ 2.1 கனெக்ஷன்கள் உள்ளது. மேலும் சாம்சங் கேமிங் மானிடரின் உயரத்தை நமக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்வதற்கும், நமக்கு ஏற்றவாறு வைத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு ஸ்டான்ட் வழங்கப்படுகிறது.

விலை விபரங்கள்:

இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள சாம்சங் ஒடிசி ஆர்க் 55 இன்ச் பிளாக்‌ஷிப் கேமிங் மானிட்டர் விலை ரூ. 2 லட்சத்து 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Game, India, Samsung, Technology