சாம்சங் ’தயிர் மேஸ்ட்ரோ’ ஃப்ரிட்ஜ்... தயிர் உறைய வைக்கும் உலகின் முதல் ஃப்ரிட்ஜ்...!

சாம்சங் வழங்கும் இந்த ’தயிர் மேஸ்ட்ரோ’ ஃப்ரிட்ஜ் 244 லிட்டர், 265 லிட்டர், 314 லிட்டர் மற்றும் 336 லிட்டர் அளவீடுகளில் விற்பனைக்கு உள்ளது.

சாம்சங் ’தயிர் மேஸ்ட்ரோ’ ஃப்ரிட்ஜ்... தயிர் உறைய வைக்கும் உலகின் முதல் ஃப்ரிட்ஜ்...!
சாம்சங் ’தயிர் மேஸ்ட்ரோ’ ஃபிரிட்ஜ்
  • News18
  • Last Updated: January 24, 2020, 3:37 PM IST
  • Share this:
சாம்சங் நிறுவனம் புதிதாக ’தயிர் மேஸ்ட்ரோ’ என்னும் ஃப்ரிட்ஜை அறிமுகம் செய்துள்ளது.

உலகிலேயே ஃபிரிட்ஜ் ஒன்று தயிர் செய்வது இதுவே முதல்முறை என்ற அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்த ஃப்ரிட்ஜில் கொடுக்கப்பட்டுள்ள தயிர் அறையில் நீங்கள் பாலைக் காய்ச்சி சூடு தணிந்ததும் ஊற்றி வைக்கவும். அடுத்த ஐந்து மணி நேரத்தில் பால் உறை மோர் இல்லாமலே தயிர் ஆகிவும்.

கெட்டித் தயிர் வேண்டுமென்றால் ஆறு மணி நேரம் பாலை ஊற்றி வைத்து எடுக்கவும். எத்தனை முறை வேண்டுமென்றாலும் ஒரே பதத்தில் உங்களுக்குத் தயிர் கிடைக்கும். வெளியில் வானிலை எந்த நிலையில் இருந்தாலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் உங்களுக்குத் தேவையான தயிரை நீங்கள் தயார் செய்துகொள்ளலாம்.


சாம்சங் வழங்கும் இந்த ’தயிர் மேஸ்ட்ரோ’ ஃப்ரிட்ஜ் 244 லிட்டர், 265 லிட்டர், 314 லிட்டர் மற்றும் 336 லிட்டர் அளவீடுகளில் விற்பனைக்கு உள்ளது. இந்தியாவிலும் இப்புதிய ’தயிர் மேஸ்ட்ரோ’ ஃப்ரிட்ஜ் உடன் இந்தியாவின் முதல் Frost Free Refrigerator மற்றும் 5 ஸ்டார் நேரடி கூல் செய்யும் சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ் ஒன்றையும் அறிமுகம் செய்வதாக சாம்சங் அறிவித்துள்ளது.

இந்த ’தயிர் மேஸ்ட்ரோ’ ஃப்ரிட்ஜ்-ன் விலை 30,990 ரூபாய் முதல் 45,990 ரூபாய் வரையில் விற்பனைக்கு உள்ளது.

மேலும் பார்க்க: 5ஜி தொழில்நுட்பமே இன்னும் இங்கு வரல... 6ஜி-க்கு தயாராகிவிட்டது ஜப்பான்!
First published: January 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading