Samsung Galaxy Note சீரிஸின் ஸ்மார்ட்போன் விரைவில் மக்களின் பயன்பாட்டில் மறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் சீரிஸ் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த ஸ்மார்ட்போன் வரிசை ஆகும். ஆனால், நிறுவனம் இந்த ஆண்டு புதிய கேலக்ஸி நோட் சீரிஸில் x எந்த ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவில்லை. மேலும் அவ்வாறு செய்ய எந்த திட்டமும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நோட் சீரிஸில் வெளியாகியுள்ள பழைய மாடலின் உற்பத்தியையும் நிறுவனம் நிறுத்துவதாக ஒரு அறிக்கை மூலம் தகவல் வெளியாகியுள்ளது..
ETNews வெளியிட்ட அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸின் உற்பத்தியை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் நோட் 20 தற்போது நோட் சீரிஸின் கடைசி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சாம்சங் இப்போது வரை போனை தயாரித்து வந்தது. ஆனால் அது இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவுக்கு வர இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் சாம்சங் நோட் 20 சீரிஸின் சுமார் 3.2 மில்லியன் சாதனங்களை விற்றதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே 2020 ஆம் ஆண்டில் இந்த ஸ்மார்ட்போன் சீரிஸின் விற்பனை 10 மில்லியனாகக் இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு முதல் நோட் 20 சீரிஸ் சாம்சங்கின் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக இருந்து வந்தது.
நோட் சீரிஸின் உற்பத்தியை நிறுத்த காரணம் என்ன?
சாம்சங்கின் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி எஸ் சீரிஸிலிருந்து நோட் சீரிஸ் எப்போதுமே வேறுபட்டதாகவே இருக்கும். இதன் அம்சங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், S Pen-னின் ஸ்டைலஸ் ஆதரவு காரணமாக நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த நிலையில், பிப்ரவரி 2022 ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் மாடலான S22 சீரிஸுக்கும் ஸ்டைலஸ் ஆதரவு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும், சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்ட் மற்றும் கேலக்ஸி ஃபிளிப் போன்ற மடிக்கக்கூடிய போன்களை சமீபத்தில் வெளியிட்டு பெரிய அளவில் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது.
சுவாரஸ்யமாக, Galaxy Fold சீரிஸுக்கு S Pen ஆதரவு வந்த முதல் ஆண்டாகவும் 2021 இருந்தது. ஆக மொத்தத்தில் சாம்சங் நிறுவனம் நோட் சீரிஸ் அல்லாது ஃபிளாக்ஷிப் ஃபோல்டபிள்கள் மற்றும் எஸ் சீரிஸ் ஆகிய மூன்று சீரிஸ் பிரீமியம் போன்களை தற்போது விற்பனை செய்து வருகிறது. மேலும் சாம்சங்கிற்கு இத்தனை சீரிஸ் உற்பத்தி சற்று அதிகம் என்று தோன்றியிருக்கலாம். இதன் காரணமாகவே நோட் 20 சீரிஸ் மாடல்களின் உற்பத்தியை நிறுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தென் கொரிய நிறுவனமானது நோட் சீரிஸின் முடிவை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த சீரிஸின் முடக்கம் தொடர்பான அறிக்கைகள் சமீப காலமாக வளம் வருகின்றன.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.