Samsung Galaxy S21 FE: சாம்சங் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுத்தம் - காரணம் தெரியுமா?

Samsung Galaxy S21 FE

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர் காலத்தில் செமி கண்டக்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்தது

  • Share this:
முன்னறிவிப்பின்றி சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங், ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. அந்த நிறுவனம் எந்தவித முன்னறிவிப்புமின்றி சாம்சங் கேலக்ஸி S21 FE (Fan Edition)-ஐ நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ப்ளூம்பெர்க், குவால்கம் சிப் பற்றாக்குறை காரணமாக அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. அண்மையில் வெளியான தகவலின்படி, சாம்சங் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு புதிய ஸ்மாட்போன்களை வெளியிட திட்டமிட்டிருந்தது.

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3, கேலக்ஸி Z பிலிப் 3 மற்றும் புதிய ஸ்மார்ட்போன் கேஜெட்டுகளை வெளியிட இருந்தது. இந்நிலையில், சிப் மற்றும் செமி கண்டெக்டர் தட்டுப்பாட்டால் இந்த அறிவிப்புகளை அந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து மார்ச் மாதம் சாம்சங் நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது. அதில், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர் காலத்தில் செமி கண்டக்டர்களை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதனால், கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்களின் புது வெர்சன்கள் வெளியாகாது என சாம்சங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோ-டோங் ஜின் கூறியிருந்தார்.

Also Read:   தன்னை விமர்சித்த நெட்டிசன்களுக்கு நாசூக்காக பதிலடி கொடுத்த பிக்பாஸ் அர்ச்சனாவின் மகள்!

இது தொடர்பாக அவர் பேசும்போது," கொரோனா ஊரடங்கு காரணமாக ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு தேவையான செமிகண்டெக்டர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. புதிய வெர்சன்கள் மற்றும் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்துவதிலும் சிக்கல் இருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்களின் புதுப்பிக்கப்பட்ட வடிவங்கள் வெளியாகாது" எனத் தெரிவித்தார். இதற்கிடையே, கீக்பெஞ்ச் இணையதளத்தில் ஹைனா செயலியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் S21 FE காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அடுத்த ஒரே வாரத்தில் சாம்சங் கேலக்ஸியின் 21 எப்.இ ஸ்மார்ட்போன் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ஸ்நாப்டிராகன் 888, 6 ஜிபி மற்றும் ஆன்டிராய்டு 11 வெர்சனில் இந்த போன் வெளியாக இருந்தது. சாம்சங் நிறுவனத்தின் மெக்சிகோ நாட்டின் வெப்சைட்டிலும் இடம்பெற்றிருந்தது. சாம்சங் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் பிளாட் டிஸ்பிளே கொண்டது. சாம்சங் கேலக்ஸி S21 ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் டிஸ்பிளே உள்ள நிலையில் அதனைவிட 2 இன்ச் டிஸ்பிளே பெரிதாக உள்ளது.

Also Read:   "வருங்கால கணவர் இந்த நடிகர் மாதிரி இருக்கனும்" - நடிகையின் விருப்பம்!

தென் கொரிய செய்தி நிறுவனமான ஹெரால்டு வெளியிட்ட தகவல்படி, அந்நாட்டில் இந்தப் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டில் ரூ.46,000 இந்த ஸ்மார்ட்போனுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. அதேபோல், சாம்சங் கேலக்ஸி S20 FE 59,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போன் 49,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும், சாம்சங் நிறுவனம் மேற்கண்ட தகவல்களை மறுத்துள்ளது. சாம்சங் தனது கேலக்ஸி எஸ் 21 எஃப்இ குறித்து இதுபோன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
Published by:Arun
First published: