Samsung Galaxy S21 Ultra, Galaxy S21 தொடரில் மற்ற மாடல்களுடன் ஜனவரி 2021ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இது டைனமிக் அமோலேட் 2 எக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 5,000 mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ் 21 தொடர் வரிசையில் Galaxy S21, Galaxy S21+ மற்றும் Galaxy S21 Ultra ஆகிய மூன்று மாடல்கள் இருக்கலாம்.
ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்பங்கள் பற்றிய செய்திகள் இப்போதே கசிய தொடங்கியுள்ள நிலையில் மற்றுமொரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது. Samsung Galaxy S21 சீரிஸுடன் USB சார்ஜர் மற்றும் இயர்போன்களை இணைக்க வேண்டாம் என்று சாம்சங் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது உண்மையானால் ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஆப்பிள் ஐபோனுக்கு பிறகு ஸ்மார்ட்போனுடன் பிற பாகங்களை இணைக்காத இரண்டாவது நிறுவனமாக சாம்சங் மாறும்.
சமீபத்திய ஐபோன் 12 சீரிஸுடன் சார்ஜரை மற்றும் இயர்போட்களை அனுப்பாததற்காக சியோமி, சாம்சங் நிறுவனங்கள் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தை கேலி செய்வதைக் காண முடிந்தது. இந்த தகவலை SamMobile முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது Galaxy S21 பாக்ஸிலிருந்து USB சார்ஜர் மற்றும் இயர்போட்களை அகற்ற சாம்சங் எடுத்த முடிவு, புதிய ஐபோன் 12 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் 6 சீரிஸுடன் இந்த பாகங்களை அகற்ற ஆப்பிள் நிறுவனம் கூறிய காரணங்களையே சாம்சங் நிறுவனமும் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also read... VPN அம்சத்துடன் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமா ஆண்ட்ராய்டு 12
போன்களின் பாக்ஸ் உடன் கூடிய பவர் அடாப்டரை அகற்றுவதன் மூலம், எங்களால் ஆண்டுதோறும் 2 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வை குறைக்க முடியும் என்று ஆப்பிள் அறிவித்தது. இது ஆண்டுக்கு 4,50,000 கார்களை சாலையில் இருந்து அகற்றுவதற்கு சமம். இயற்கையாகவே, ஐபோன் 12 மாடல்களைக் கொண்டு செல்லும் பாக்ஸ்களின் அளவும் குறைகிறது. ஏனெனில் இப்போது சார்ஜர் மற்றும் இயர்போட்கள் போன்ற கூடுதல் சாதனங்களுக்கு இடமளிக்க வேண்டிய அவசியமில்லை.
முந்தைய ஆண்டின் ஐபோன் பாக்ஸ்களுடன் ஒப்பிடும்போது 70 சதவிகித கூடுதல் பாக்ஸ்களை இப்போது அதே இடத்தில் அனுப்ப முடியும். இதேபோல், இது ஒட்டுமொத்த உற்பத்தியின் விலையையும் குறைக்கிறது. இதுகுறித்து தகவல் அளித்த SamMobile, சாம்சங் சார்ஜரை உள்ளடக்கியிருக்கலாம். ஆனால் Samsung Galaxy S21 பாக்ஸிலிருந்து இயர்போன்களை அகற்றக்கூடும் என்று சில உள்நாட்டினர் நம்புகிறார்கள்.
பாக்ஸிலிருந்து இயர்போன்களை அகற்றுவதன் மூலம், Samsung அதன் புதிய கேலக்ஸி பட்ஸ் TWS இயர்போன்களை பயனர்களிடையே கொண்டு சேர்க்கும். ஆகஸ்ட் 2019ல், ஐபோன் 7 மாடல்களில் ஹெட் போன் ஜாக்கை அகற்ற ஆப்பிள் எடுத்த முடிவை கேலி செய்யும் விளம்பரங்களை தற்போது சாம்சங் நிறுவனம் அமைதியாக நீக்கியது. சாம்சங் பின்னர் அப்போதைய முதன்மை கேலக்ஸி நோட் 10 சாதனங்களுடன் ஹெட் போன் ஜாக்கை அகற்றியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.