சாம்சங் நிறுவனம், அதன் M சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
எம் 10 மற்றும் எம் 20 என்ற இரண்டு வகை ஸ்மார்ட்போன்கள், வருகிற 5-ம் தேதியில் இருந்து AMAZON இணையதளத்தில் விற்பனைக்கு வரும்.
எம் 10 ஸ்மார்ட்போன், எட்டாயிரம் ரூபாய், எம் 20 போன் , 11 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் நீடிக்கும் 5000 MAH பேட்டரியுடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப் பெரிய வளர்ச்சியை அடந்துள்ளது. எனவே சியோமியிடம் இழந்த சந்தையை மீண்டும் பிடிக்கவே சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடல்களை M சீரிஸில் அறிமுகம் செய்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சாம்சங் கேலக்ஸி எம் 10, 6.22 இஞ்ச் டிஸ்பிளே, 2 ஜிபி ரேம், 16 ஜிபி உட்புர சேமிப்பு, 13 & 5 மெகா பிக்சல் கேமரா உடன் 7,990 ரூபாய்க்கும், 3ஜிபி ரேம்/ 32ஜிபி உட்புற சேமிப்பு என்றால் 8,990 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எம் 20, 6.30 இஞ்ச் டிஸ்பிளே, 3 ஜிபி ரேம், 32 ஜிபி உட்புர சேமிப்பு, 13 & 5 மெகா பிக்சல் கேமரா உடன் 10,990 ரூபாய்க்கும், 4ஜிபி ரேம்/ 64ஜிபி உட்புற சேமிப்பு என்றால் 12,990 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் அதிமுக...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Samsung