Home /News /technology /

சாம்சங் கேலக்ஸி A22-ன் புதிய 2 மாடல் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்திய சாம்சங்

சாம்சங் கேலக்ஸி A22-ன் புதிய 2 மாடல் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்திய சாம்சங்

சாம்சங் கேலக்ஸி

சாம்சங் கேலக்ஸி

சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட் ஃபோன் கிரே, மின்ட், வயலட் மற்றும் வொயிட் கலர் ஆப்ஷன்களிலும், 4ஜி மாடல் பிளாக், மின்ட், வயலட் மற்றும் வொயிட் கலர் ஆப்ஷன்களிலும் வருகிறது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
சாம்சங் நிறுவனம் தனது A-சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன் வரிசையை சாம்சங் கேலக்ஸி A22 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி A22 4 ஜி ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளதன் மூலம் புதுப்பித்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரு ஸ்மார்ட் ஃபோன்களும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இருந்தாலும் ஸ்பெஸிஃபிகேஷன்கள் அடிப்படையில் மிகவும் வேறுபட்டவையாக இருக்கின்றன. புதிதாக அறிமுகமாகி உள்ள 5 ஜி மாடலில் ட்ரிப்பிள் ரியர் கேமரா ஒரு பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

4 ஜி வேரியண்ட்டில் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இரண்டு சாம்சங் ஃபோன்களுமே 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளன. இந்த 2 புதிய ஸ்மார்ட் ஃபோன்களும் நெதர்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில் இந்தியா உட்பட உலகின் பிற நாடுகளில் இவை எப்போது கிடைக்கும் என்ற தகவல்களை சாம்சங் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட் ஃபோன் கிரே, மின்ட், வயலட் மற்றும் வொயிட் கலர் ஆப்ஷன்களிலும், 4ஜி மாடல் பிளாக், மின்ட், வயலட் மற்றும் வொயிட் கலர் ஆப்ஷன்களிலும் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி A22 5ஜி:

இந்த ஸ்மார்ட் ஃபோன் 6.6 இன்ச் ஃபுல்-எச்டி + டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் மற்றும் சிங்கிள் செல்ஃபி கேமராவிற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்சுடன் வருகிறது. இது பெயரிடப்படாத ஆக்டா-கோர் ப்ராசஸரை கொண்டுள்ளது, இது மீடியாடெக் டைமன்சிட்டி 700 (MediaTek Dimensity 700)- ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஃபோனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை விரிவாக்கி கொள்ளலாம். இதன் ட்ரிப்பிள் ரியர் கேமராவில் f/1.8 துளை கொண்ட 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, f/ 2.2 துளை கொண்ட 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் முன் பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்கிற்காக 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது. இந்த 5ஜி ஃபோனின் மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை அடங்கும். இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கு தோராயமாக ரூ.20,300, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு தோராயமாக ரூ.22,100 என்ற விலை குறியீட்டைக் கொண்டுள்ளது. அதே சமயம் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கான விலை குறித்து எதுவும் தெரியவில்லை.

Also read... வாட்ஸ்அப்பில் 3 புதிய அப்டேட்டுகள் - என்னென்ன தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி A22 4ஜி:

ஆண்ட்ராய்டு 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட் ஃபோன் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட்டுடன் ஒப்பீட்டளவில் சிறிய 6.4 இன்ச் எச்டி + சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி கேமராவிற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இது பெயரிடப்படாத ஆக்டா-கோர் சிஸ்டம்-ஆன்-சிப்பை கொண்டுள்ளது. இது மீடியா டெக் ஹீலியோ ஜி 80 (MediaTek Helio G80) ஆக இருக்க கூடும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஃபோன் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

இது f/1.8 துளை மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (ஓஐஎஸ்) ஆதரவுடன் கொண்ட 48 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை பெற்றுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக, f/2.2 துளை கொண்ட 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், சைட் மவுண்ட்டட் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை அடங்கும். இந்த ஃபோன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.விலை விவரங்கள் தற்போது தெளிவாக இல்லை.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Samsung

அடுத்த செய்தி