செல்போன் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு இது பிடிக்கும்!!

Yuvaraj V | news18
Updated: March 15, 2019, 6:25 PM IST
செல்போன் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு இது பிடிக்கும்!!
KidsMode
Yuvaraj V | news18
Updated: March 15, 2019, 6:25 PM IST
உங்கள் குழந்தை அதிக நேரம் செல்போனில் செலவழிக்கிறதா.? உங்களுக்கு தெரியாமல் தேவையில்லாத ஆப், போன் கால் செய்து விடுகிறதா...? கவலை வேண்டாம். தீர்வு இருக்கிறது.

ஒன்று. நாம் குழந்தையோடு செலவிட வேண்டும். நாம் செலவிடாததால்தான் நம் செல்பேசியுடன் குழந்தை அதிகம் செலவிடுகிறது.

இரண்டு. நம் செல்பேசியை குழந்தைத்தனமாக்கி விடலாம். ஆம். நம்மைப் போன்று நம் செல்பேசியும் எப்போதும் பிஸியாக, பிஸினஸ், பெர்சனல் என்று பெரியவர்களுக்கானதாக இருந்தால் குழந்தைகள் அதை எதிர்கொள்ளாமல் இருந்து விடுவார்களா..? அதனால் செல்போனையாவது குழந்தைத்தனமாக்கி விடலாமே.


ஒன்றாவது தீர்வைவிட இரண்டாவது தீர்வு பற்றிதான் நம்மில் பலருக்கு விருப்பம் இருக்கும்.

சைல்டு மோடுக்கு எப்படி மாற்றுவது என்பது தானே உங்கள் கேள்வி...

ஸ்மார்ட்போன்களில் சாம்சங் நிறுவனத்தின் போன் வைத்திருப்பவர்களுக்கு கேலக்ஸி ஆப்ஸ் ஸ்டோரில்  கிட்ஸ் மோட் என்ற அப்ளிகேசன் கிடைக்கிறது. அதை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

Loading...

உங்கள் போன் இப்போது முழுதாக குழந்தையாக மாறிவிடும்.

உங்கள் குழந்தைக்கு தேவையில்லாத அப்ளிகேசனை அணுக வாய்ப்பிருக்காது. அதில் உங்கள் குழந்தைக்கு நெருக்கமானவர்களின் செல்பேசி எண்கள் மட்டும் தெரிவது போல் மாற்றி வைக்கலாம். குழந்தைகள் எந்த அப்ளிகேசன் பயன்படுத்தலாம், எந்த வீடியோவை அணுகலாம், எந்த படங்களை பார்க்கலாம் உள்ளிட்டவற்றை நாமே செட்டிங்க்சில் மாற்றிவிட்டால் போதும். அதனோடு மட்டுமே குழந்தைகள் புழங்கிக்கொண்டிருக்கும்.அப்புறம் முக்கியமானது ஒருநாளைக்கு எவ்வளவு மணி நேரம் மட்டும் குழந்தைகள் செல்பேசியை பயன்படுத்தலாம் என்பதையும் நிர்ணயிக்கலாம். மொத்தம் 1 மணி நேரம் என்று நாம் நிர்ணயித்தால், அந்த கால அளவு முடிந்தது செல்பேசி வேலை செய்யாது..

உங்கள் கவலை முக்கியமான கால் வருமே என்பது தானே. அந்த கவலையும் வேண்டாம். அதெல்லாம் வரும். குழந்தைக்குதான் அந்த தடை எல்லாம்.  இதனால்,குழந்தைகள் அதிக நேரம் செல்பேசி பயன்படுத்துவதை குறைக்கலாம்.


ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவரவருக்கு தனித்தனி நுழைவு தரலாம். பெற்றோர்கள் செட்டிங்க்சை மாற்ற நினைத்தால் அதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து மாற்றலாம்.

கிட்ஸ் மோடில் ஏராளமான குழந்தைகளின் அறிவுத்திறனுக்கு தேவையான அப்ளிகேசன் உள்ளன. குழந்தைகள் கேட்கும் போது கிட்ஸ் மோடுக்கு செல்பேசியை மாற்றி அவர்களை அறிவார்த்தமான அம்சங்களால் உற்சாகப்படுத்தலாம்.

ட்ரை பண்ணி பாருங்க...  https://www.samsung.com/global/galaxy/apps/kids-mode/

Also Watch:
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...