Home /News /technology /

ஸ்மார்ட்போன் உற்பத்தியைக் குறைக்கும் சாம்சங் நிறுவனம் - காரணம் என்ன தெரியுமா?

ஸ்மார்ட்போன் உற்பத்தியைக் குறைக்கும் சாம்சங் நிறுவனம் - காரணம் என்ன தெரியுமா?

சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு தனது உற்பத்தித் திட்டங்களைக் குறைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்திய வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளாக சாம்சங் நிறுவனம் விளங்கி வருகிறது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள இந்நிறுவனம் சமீபத்தில் மடக்கக்கூடிய வகையிலான சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 4 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதேபோல் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது. சமீப காலமாக சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சரிந்து வருவதால் உற்பத்தியைக் குறைக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான டிமாண்ட் பெரிதாக இல்லாததால் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள சாம்சங் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ம் ஆண்டுக்கான தேவை குறைந்துள்ளதால், கடந்த ஆண்டை விடக் குறைவான அளவிலான ஸ்மார்ட்போன்களை மட்டுமே உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    தி எலெக்கின் அறிக்கையில், சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு 334 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும், அவற்றில் 300 மில்லியன் யூனிட்களை வெவ்வேறு சந்தைகளுக்கு அனுப்பும் திட்டம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்நிறுவனம் தனது உற்பத்தி திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது. சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மீதான வாடிக்கையாளர்களின் தேவை குறைந்துள்ளதைக் கணக்கில் கொண்டு, 260 மில்லியன் யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு 300 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்த சாம்சங் நிறுவனம், அதில் 270 மில்லியன் யூனிட்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

    Also Read : உங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தைச் செலுத்தச் சிரமப்படுகிறீர்களா? இந்த ஆப்ஷனை ட்ரை பண்ணலாமே!

    இது தவிர, பண்டிகைக் காலத்திற்கான உற்பத்தியையும் சாம்சங் நிறுவனம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வரும் காலாண்டில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் சந்தை மதிப்பு கடும் சரிவைச் சந்திக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    குறைந்த நுகர்வோர் தேவை, நுகர்வோர் வாங்குதல்களைப் பாதிக்கும் பணவீக்கம் மற்றும் விநியோகச் சங்கிலி தொடர்பான சில சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் சாம்சங் நிறுவனம் இத்தகைய முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் அதன் சமீபத்திய மடிக்கக்கூடிய வகையிலான Galaxy Z Fold 4 மற்றும் Galaxy Z Flip 4 ஆகியவற்றின் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் தேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே பிரீமியம் லெவல் வாடிக்கையாளர்களுக்கான உற்பத்தியைக் குறைப்பது தொடர்பாக சாம்சங் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. அதேசமயம் விரைவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14-யை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் செப்டம்பர் மாதத்தில் சாம்சங் நிறுவனத்தில் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையும் பாதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Sales, Samsung, Technology

    அடுத்த செய்தி