2 பேட்டரி, 6 கேமிரா என கிறுகிறுக்க வைக்கும் விலையில் சாம்சங் கேலக்ஸி Fold!

பின் பக்கத்தில் மூன்று கேமிரா, முன் பக்கம் ஒன்று, மடியும் பகுதியில் இரண்டு என மொத்தம் 6 கேமிராக்கள் உள்ளன.

2 பேட்டரி, 6 கேமிரா என கிறுகிறுக்க வைக்கும் விலையில் சாம்சங் கேலக்ஸி Fold!
சாம்சங் கேலக்ஸி fold
  • News18
  • Last Updated: October 1, 2019, 2:53 PM IST
  • Share this:
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் ஒரு வழியாக சாம்சங் கேலக்ஸி Fold இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

பல கோளாறுகள், தோல்வியில் முடிந்த சோதனை முயற்சிகள் என சாம்சங் கேலக்ஸி Fold வெளியீடு தாமதமானது. முதலில் பிப்ரவரி மாதம் சாம்சங் கேலக்ஸி Fold வெளியாவதாக இருந்தது. ஆனால், போனின் திரை மடிக்கும் போது உடைகிறது என்ற குறைபாடால் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது.

வடிமைப்பிலும் கட்டமைப்பிலும் மேம்பாடு செய்யப்பட்டிருப்பதால் இனி பிரச்னை ஏதும் எழாது என சாம்சங் தெரிவித்தது. மேலும், போனின் மேல் மற்றும் கீழ் பாகங்கள் உடையாதவாறு பாதுகாப்புக் கவசம் போன்ற இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்புற டிஸ்ப்ளே 4.6 இன்ச் கொண்டதாகவும் மடிக்கும் வகையிலான உட்புற டிஸ்ப்ளே 7.3 இன்ச் கொண்டதாகவும் உள்ளது.


இந்தியாவின் முதல் மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி Fold-ன் விலை 1,64,999 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். 4,380mAh உடனான இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. பின் பக்கத்தில் மூன்று கேமிரா, முன் பக்கம் ஒன்று, மடியும் பகுதியில் இரண்டு என மொத்தம் 6 கேமிராக்கள் உள்ளன.

மேலும் பார்க்க: ’ஸ்மார்ட் சட்டை’ மூலம் உடல்நலப் பிரச்னைகளையும் கண்டறியலாம்!

108 ஆம்புலன்ஸ் சேவையை தவறாக பயன்படுத்துவதை விசாரிக்க குழு!
First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading