புதிய அப்டேட்டுடன் வெளியானது சாம்சங் கேலக்ஸி A50s மற்றும் கேலக்ஸி A30s!

அமேசான், ஃப்ளிப்கார்ட், பேடிஎம் மால் மற்றும் சாம்சங் ஆன்லைன் - ஸ்டோர் ஆகிய இடங்களில் புது போன்கள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன.

Web Desk | news18
Updated: September 11, 2019, 9:06 PM IST
புதிய அப்டேட்டுடன் வெளியானது சாம்சங் கேலக்ஸி A50s மற்றும் கேலக்ஸி A30s!
சாம்சங் கேலக்ஸி A30s மற்றும் சாம்சங் கேலக்ஸி A50s
Web Desk | news18
Updated: September 11, 2019, 9:06 PM IST
சாம்சங் நிறுவனம் தனது இரு ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்து சாம்சங் கேலக்ஸி A30s மற்றும் A50s என விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.

6.4 இன்ச் ஹெச்டி+ ஸ்கிரீன், விரல்நுனி சென்சார், ஆக்டா-கோர் ப்ராஸ்சசர், 4,000mAh பேட்டரி திறன், மூன்று ரியர் கேமிரா அமைப்பு, 16 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிரா என அசத்தும் சிறப்பம்சங்கள் உடனான சாம்சங் கேலக்ஸி A30s 4ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ் ரகத்தின் விலை 16,999 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A30s 25+8+5 மெகாபிக்சல் திறன் கொண்ட மூன்று ரியர் கேமிராக்கள் உடன் 16 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிராவையும் கொண்டுள்ளது சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. கேலக்ஸி A50s 48+8+5 மெகாபிக்சல் உடனான 3 ரியர் கேமிராவும் 32 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிராவும் கொடுக்கப்பட்டுள்ளது.


கருப்பு, வெள்ளை மற்றும் வயலெட் ஆகிய மூன்று நிறங்களில் கேலக்ஸி A30s ஸ்மார்ட்ஃபோன் வெளியாகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி A50s 4ஜிபி ரேம் ரகம் 22,999 ரூபாய்க்கும் 6ஜிபி ரேம் ரகம் 24,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட், பேடிஎம் மால் மற்றும் சாம்சங் ஆன்லைன் - ஸ்டோர் ஆகிய இடங்களில் புது போன்கள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும் பார்க்க: லைவ் டிவி முதல் நெட்ஃப்ளிக்ஸ் வரை... ஏர்டெல் Xstream 4K ஹைபிரிட் பாக்ஸில் என்ன ஸ்பெஷல்?

மூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்!

Loading...

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...