Home /News /technology /

ஸ்மார்ட்போன்கள் உட்பட பல பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி... சாம்சங் க்ராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனை ஆரம்பம்

ஸ்மார்ட்போன்கள் உட்பட பல பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி... சாம்சங் க்ராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனை ஆரம்பம்

சாம்சங் க்ராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனை ஆரம்பம்

சாம்சங் க்ராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனை ஆரம்பம்

சாம்சங்கின் கேஜெட்டுகள் மற்றும் சாதனங்களின் வரிசையில் வெளிப்படையான தள்ளுபடிகள் தவிர, இந்நிறுவனம் எச்.டி.எஃப்.சி வங்கி வாங்குதல்களில் 10 சதவீத கேஷ்பேக்கையும் வழங்குகிறது.

  • News18
  • Last Updated :
சாம்சங் க்ராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் உட்பட பல பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் இந்தியா தனது பண்டிகை கால விற்பனையின் ஒரு பகுதியாக ஸ்மார்ட்போன்கள், ஆபரணங்கள், டி.வி.க்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் ஆகியவற்றின் மீது சூப்பரான தள்ளுபடியை அறிவித்துள்ளது. சாம்சங் கிராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனை இன்று தொடங்கி அக்டோபர் 22 வரை நடக்கிறது.

இதில், கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடிகள் மற்றும் அணியக்கூடிய பொருட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியையும், டிவிக்களில் 45 சதவீதம் வரை தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. வீட்டு உபகாரணங்களுக்கு, அதன் தயாரிப்பு வரம்பில் 12.5 சதவீதம் வரை கேஷ்பேக் சலுகைகளை வழங்கியுள்ளது.

ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியாக, சாம்சங் கேலக்ஸி S20+ -ல் 40 சதவீத விலைக் குறைப்பைக் காணலாம். அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.49,999க்கு விற்பனையாகிறது. அதாவது அதன் அசல் விலையான ரூ.83,000 -லிருந்து, சுமார் ரூ.33,001 தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும், ஜேபிஎல் ஸ்பீக்கர்களுக்கும் சாம்சங் தள்ளுபடியை அறிவித்துள்ளது. பில்ட்-இன் பவர் வங்கியுடன் ஜேபிஎல் சார்ஜ்4 போர்ட்டபிள் ஸ்பீக்கர் ரூ. 9,999க்கு விற்பனை செய்யப்படும். இதன் அசல் விலையான ரூ.15,999 -ல், ரூ.6,000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S20+ தவிர, சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ரூ.1,04,999க்கு விற்பனையாகிறது. அதன் ஸ்டிக்கர் விளையான ரூ.1,16,000-ல் இருந்து ரூ.11,001 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஸ்மார்ட்வாட்ச் அதன் அசல் ஸ்டிக்கர் விலையான ரூ. 29,990-லிருந்து தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.14,990க்கு விற்பனையாகிறது. அதேபோல சாம்சங் தனது வயர்லெஸ் சார்ஜரை ரூ.1,999-க்கு விற்கிறது.

அதன் ஸ்டிக்கர் விலை ரூ.4,999 ஆகும். அடுத்ததாக, சாம்சங்கின் 55 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி தி ஃபிரேம் ரூ.81,990-க்கு விறபனையாகிறது. இதன் தள்ளுபடி விலை: ரூ. 48,000 அசல் விலை: ரூ. 1,29,900 ஆகும். சாம்சங்கின் கிராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனையின் போது ஜேபிஎல் ஃபிளிப் 5 வயர்லெஸ் ஸ்பீக்கர் ரூ.6,999க்கு விற்கப்படுகிறது. மேலும், வயர்லெஸ் ஒலிபெருக்கி கொண்ட ஜேபிஎல் 5.1 சவுண்ட் பார் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ கடையில் ரூ.43,999-க்கு விற்பனைக்கு வருகிறது.



Also read... Amazon Great Indian Festival தொடங்கியது: அட்டகாசமான மொபைல்போன்களின் அதிரடி ஆஃபர்கள்..

சாம்சங்கின் கேஜெட்டுகள் மற்றும் சாதனங்களின் வரிசையில் வெளிப்படையான தள்ளுபடிகள் தவிர, இந்நிறுவனம் எச்.டி.எஃப்.சி வங்கி வாங்குதல்களில் 10 சதவீத கேஷ்பேக்கையும் வழங்குகிறது. இது தவிர, சாம்சங் கடை பயன்பாட்டைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சாம்சங் சாதனங்களை வாங்கினால், மேற்கூறிய தள்ளுபடிகளுக்கு மேல் ரூ.3,000 தள்ளுபடியை சாம்சங் வழங்குகிறது.

பொருட்களை வாங்குபவர்கள் ஓலா மனி வழியாக பணம் செலுத்துவதன் மூலம் பரிமாற்ற சலுகைகளையும், ரூ.1,000 வரை 5 சதவீத கேஷ்பேக்கையும் பெறலாம். சாம்சங் கிராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனையின் போது ஸ்மார்ட்போன்கள், ஆபரணங்கள், டிவிகள், உபகரணங்கள் மற்றும் ஆடியோ தயாரிப்புகள் போன்ற வகைகளில் சாம்சங் தயாரிப்புகளுக்கு இந்த முறை செம்மையான தள்ளுபடி கிடைக்கிறது.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Deepavali, Samsung

அடுத்த செய்தி