சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 வருகிற ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி அன்று அறிமுகமாக உள்ளது. இந்த இரண்டு மடிக்கக்கூடிய தொலைபேசிகளும் சாம்சங் கேலக்ஸி அன் பேக்டு ஈவென்ட் 2021 நிகழ்வில் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் 2 TWS உடன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த வெளியீட்டு நிகழ்விற்கு முன்னதாகவே, சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மொபைல்களின் விலை குறித்த தகவல் ஆன்லைனில் கசிந்துள்ளது.
இங்கிலாந்தில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 விலை இந்தியாவில் அறிவிக்கப்படும் விலையை காட்டிலும் சற்று அதிகமாக இருக்கும் என்று கசிந்த விவரங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 91 மொபைல்களின் படி, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஐ இங்கிலாந்தில் 1599 யூரோ டாலர்களுக்கு நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்திய விலைப்படி ரூ .1,65,000 ஆகும். அதேபோல கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3-யின் விலை 949 யூரோ டாலர்கள் (தோராயமாக ரூ. 97,900) என்ற ஆரம்ப விலையில் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த விலையோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3-ன் விலை ரூ.1,35,000 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்தியாவில் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 இன் விலை எவ்வளவு என்று தெரியவில்லை. இருப்பினும், சாம்சங் இந்த கிளாம்ஷெல் மடிக்கக்கூடிய தொலைபேசியின் விலையை ரூ.80,000 முதல் ரூ .90,000 வரை நிர்ணயிக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3ன் அம்சங்கள்:
கசிந்த தகவல்களின் படி, மடிக்கக்கூடிய
ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா வரிசை இருக்கும். இது 12MP + 12MP + 16MP கேமரா சென்சார் அமைப்பைக் கொண்டிருக்கும். மேலும் இந்த மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே 16 எம்பி அண்டர்-டிஸ்ப்ளே கேமராவைக் கொண்டிருக்கும், அதேசமயம் கவர் ஸ்கிரீன் 10எம்பி கேமராவுடன் ஹோல்-பஞ்ச் கட்அவுட்டுக்குள் வரும்.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மொபைல், 7.55 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR10+ ஆதரவை ஆதரிக்கும். வெளிப்புற காட்சி 6.2 அங்குல உயரம் இருக்கும். இரண்டு திரைகளும் சாம்சங்கின் எஸ் பெனை ஆதரிக்கும். இது ஸ்னாப்டிராகன் 888 SoC இலிருந்து செயல்திறனை பெறுகிறது. இந்த சாதனம் 2500 வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,500 mAh பேட்டரியை பேக் செய்கிறது.
Also read... ஸ்மார்ட்போன் விற்பனையில் ’சியோமி’முதலிடம் - சாம்சங், ஆப்பிள் நிறுவனங்கள் சரிவு.. என்ன காரணம் தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3-ன் அம்சங்கள்:
சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 மொபைல் வெள்ளை, ஊதா, கருப்பு, பச்சை ஆகிய நான்கு இரட்டை நிறங்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் கிளாம்ஷெல் மடிக்கக்கூடியது உரை செய்திகளைப் படிக்க பெரிய 1.1 அங்குல கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
இது 6.7 அங்குல மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருப்பதாக வதந்தி பரவியுள்ளது. இதன் கேமரா தொகுதி சீரமைப்பு மாற்றப்பட்டுள்ளது என்றும், இப்போது வலது பக்கத்தில் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் கசிந்த விவரக்குறிப்புகளின்படி, கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 கேமரா 12MP + 12MP சென்சார் அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் 10 எம்பி முன்பக்க கேமரா இருப்பதாகவும் வதந்திகள் வெளியாகியுள்ளன.
அதேபோல கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் மற்றும் பட்ஸ் 2 ஆகியவை நிறுவனத்தின் இந்த வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் மற்ற இரண்டு தயாரிப்புகளாகும். கேலக்ஸி வாட்ச் 4 உடன் வாட்ச் 4 கிளாசிக்கும் இருக்கும். சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2-வின் டிசைன் ரெண்டர்களும் தற்போது கசிந்துள்ளன. இந்த TWS குறைந்தபட்ச வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.