Home /News /technology /

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3, கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 மீது "வேற லெவல்" ஆபர் அறிவிப்பு!

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3, கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 மீது "வேற லெவல்" ஆபர் அறிவிப்பு!

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3

Samsung Galaxy Z Fold 3 Galaxy Z Flip 3 : இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 மாடல்களின் மீது புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

மடங்கக்கூடிய அல்லது ஃபோல்ட்பிள் ஸ்மார்ட்போன்களின் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனம் எது? என்கிற கேள்விக்கு ஆப்ஷன்களே இல்லை. ஒரே ஒரு பதில் தான். அது தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங்.

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்22 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வரும் நிலையில், இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 மாடல்களின் மீது புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் மீதான தள்ளுபடியில் கேஷ்பேக் சலுகையும் அடங்கும். உடன் சாம்சங் பைனான்ஸ் பிளஸ் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தினால் ரூ.5000 என்கிற சலுகையும் அணுக கிடைக்கும்.

சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபோல்ட்பிள் ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 மீது ரூ.7,000 வரையிலான தள்ளுபடியை பெறுவது எப்படி என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்:



சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 மாடலை வாங்க விரும்புபவர்கள் சாம்சங் பைனான்ஸ் பிளஸ் வழியாக ரூ. 5,000 மதிப்புள்ள கேஷ்பேக்கைப் பெறலாம். மேலும், அவர்கள் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவதன் வழியாக ரூ.7,000 வரை சேமிக்கலாம்.

அனைத்து வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளிலும். சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 மீது ரூ.7,000 கேஷ்பேக் அல்லது ரூ.10,000 அப்கிரேட் போனஸ் வங்கி அணுக கிடைக்கும்.



தவிர நீங்கள் இந்த இரண்டு மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்றை வாங்க விரும்பினால், உங்களால் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2-வை வெறும் ரூ.1,999 க்கு சொந்தமாக்கி கொள்ள முடியும். நினைவூட்டும் வண்ணம், சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2-வின் அசல் விலை ரூ.11,999 ஆகும்.

ALSO READ |  ஏர்பாட்ஸ்களை எளிதாக ரீசெட் செய்யும் வழிமுறைகள்...

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 மீதான இந்த சலுகைகள் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே அணுக கிடைக்கும், மேலும் இந்த சலுகை, இந்த மாத இறுதி வரை அதாவது ஜனவரி 31 வரை செல்லுபடியாகும்.



சலுகைகள் இல்லாமல் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 ஆனது ரூ.84,999 முதலும், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஆனது ரூ.1,49,999 க்கும் இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மாடலின் பிரதான அம்சங்கள்:

இது 6.2-இன்ச் வெளிப்பக்க டைனமிக் அமோஎல்இடி டிஸ்ப்ளே (120Hz புரெஃப்ரெஷ் ரேட்), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் 7.6-இன்ச் உள்பக்க க்யூஎக்ஸ்ஜிஏ+ டைனமிக் அமோஎல்இடி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 12ஜிபி வரை ரேம் மற்றும் மொத்தம் ஐந்து கேமராக்களை கொண்டுள்ளது. அதில் மூன்று 12 மெகாபிக்சல் சென்சார்களை உள்ளடக்கிய ரியர் கேமரா அமைப்பு + 10-மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர், டிஸ்பிளேவிற்கு கீழே வைக்கப்பட்டு 4-மெகாபிக்சல் கேமராக்கள் அடங்கும்.



சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 மாடலின் பிரதான அம்சங்கள்:

6.7-இன்ச் எப்ஃஎச்டி+ டைனமிக் அமோஎல்இடி டிஸ்ப்ளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட்), 1.9 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே (அமோஎல்இடி பேனல்), 8ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்,டூயல் ரியர் கேமரா அமைப்பு, ஒரு 12 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர் உடன் இரண்டாம் நிலை 12 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3,300எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Galaxy, Samsung, Samsung Galaxy

அடுத்த செய்தி