Home /News /technology /

Samsung Galaxy Tab S8 இந்தியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

Samsung Galaxy Tab S8 இந்தியாவில் அறிமுகம்... விலை என்ன தெரியுமா?

samsung galaxy tab s8 series

samsung galaxy tab s8 series

Samsung galaxy tab s8 series in India | கேலக்ஸி டேப் S8 டேப்லெட்டை கேலக்ஸி PC களுக்கான தொடுதிரை திறன்களைக் கொண்ட ஒரு சிறிய இரண்டாவது மானிட்டராகவும் மாற்றப்படலாம். கேலக்ஸி டேப் S8 தொடர் சாம்சங்கின் தொழில்துறை நாக்ஸ் வால்ட் தளத்தால் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ் 22 ரக போன்களை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது எஸ்8 தொடரிலான டேப்லெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் உலகளாவிய வெளியீட்டிற்குப் பிறகு இந்தியாவில் கேலக்ஸி டேப் S8 தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. கேலக்ஸி டேப் S8 அல்ட்ரா மாடல் 12 ஜபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இதன் விலை தோராயமாக ரூ.52,400 ஆகும். இந்த டேப்லெட் 14.6 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 6.3mm இல் மெல்லிய பெசல்களுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது ஒரு அலுமினிய சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது.

ஆட்டோ ஃப்ரேமிங் தொழில்நுட்பத்துடன் கூடிய இரட்டை 12எம்பி முன்பக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சாதனம் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 6 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் ஆதரவோடு வருகிறது. கேமரா அமைப்பு எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் வசதி இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 ஆனது மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 மூலம் இயக்கப்படுகிறது.

கேலக்ஸி டேப் S8 டேப்லெட்டை கேலக்ஸி PC களுக்கான தொடுதிரை திறன்களைக் கொண்ட ஒரு சிறிய இரண்டாவது மானிட்டராகவும் மாற்றப்படலாம். கேலக்ஸி டேப் S8 தொடர் சாம்சங்கின் தொழில்துறை நாக்ஸ் வால்ட் தளத்தால் பாதுகாக்கப்படுகிறது. மேலும், கேலக்ஸி டேப்லெட்டில் முதன்முறையாக, சாம்சங் உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தைக் கண்காணிக்க Samsung Health பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.



கேலக்ஸி டேப் S8தொடர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

1. கேலக்ஸி டேப் S8 அல்ட்ரா ஆனது 14.6-inch AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

2. கேலக்ஸி டேப் S8 தொடர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 மூலம் இயக்கப்படுகிறது.

3. சாம்சங் எஸ் பென்னை அல்ட்ராலோ லேட்டன்சிக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

4. கேலக்ஸி டேப் S8மற்றும் கேலக்ஸி டேப் S8+ ஆகியவை 8ஜபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடனும் கிடைக்கிறது.

Also Read : இந்திய தொழில்நுட்ப வல்லுநருக்கு வெகுமதியோடு நன்றி தெரிவித்த கூகுள்

5. கேலக்ஸி டேப் S8 அல்ட்ரா ஆனது கிராபைட் நிறத்திலும், கேலக்ஸி டேப் S8 மற்றும் S8+ ஆகியவை கிராஃபைட், சில்வர் மற்றும் பிங்க் கோல்டு என மூன்று நிறத்திலும் கிடைக்கிறது.

6. கேலக்ஸி டேப் S8 அல்ட்ரா ஆனது 12 ஜபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,08,999, இதில் வைஃபை சப்போர்ட் மாடல் ரூ,1,22,999 ஆகும்.

7. கேலக்ஸி டேப் S8+ விலை Wi-Fi மாறுபாட்டிற்கு ரூ. 74, 999 மற்றும் 5G சேவைக்கு ரூ.87,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

8. கேலக்ஸி டேப் S8 விலை வைஃபை உடன் கனெக்ட் ஆகும் மாடலுக்கு ரூ.58,999 மற்றும் 5 ஜி மாடலுக்கு ரூ. 70,999 எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : OLXல் பழைய பர்னிச்சரை விற்க முயன்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

9. கேலக்ஸி டேப் S8 சீரிஸ் Samsung.com மற்றும் பிற சாம்சங் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்களில் பிப்ரவரி 22 முதல் மார்ச் 10, 2022 வரை முன்கூட்டிய ஆர்டருக்குக் கிடைக்கும்.

10. கேலக்ஸி டேப் S8 சீரிஸ் முன்பதிவு செய்யும் நுகர்வோருக்கு ரூ.22,999 மதிப்புள்ள மதிப்புள்ள இலவச கீபோர்டு கவர் வழங்கப்படும். கூடுதலாக, நுகர்வோர் ரூ.10000 கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். எச்.டி.எப்.சி வங்கி கார்டை பயன்படுத்தி கேலக்ஸி டேப் S8 அல்ட்ரா வாங்கினார் ரூ.8 ஆயிரமும், கேலக்ஸி டேப் S8 வாங்கினால் ரூ.7 ஆயிரம் வரையிலும் கேஷ்பேக் கிடைக்கும். நோ காஸ்ட் EMI விருப்பங்களும் கிடைக்கின்றன.
Published by:Selvi M
First published:

Tags: India, Samsung, Technology

அடுத்த செய்தி