சாம்சங் கேலக்ஸி எஸ் 22 (Samsung Galaxy S22) சீரிஸ் அடுத்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸில் சாம்சங் கேலக்ஸி எஸ் 22, சாம்சங் கேலக்ஸி எஸ் 22+ மற்றும் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகவுள்ளன.
தற்போது அதில் இரு மாடல்களின் சில ஸ்பெசிபிகேஷன்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. அதாவது சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறன் சீனாவின் 3C சான்றிதழ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி எஸ் 22 சீரிஸ் 65 டபிள்யூ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட பேட்டரியுடன் வரலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவலில், சாம்சங்கின் முதன்மை ஸ்மார்ட்போன் சீரிஸின் ஒரு பகுதியாக கூறப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களின் மாதிரி எண்களும் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
3C சான்றிதழ் தளத்தின் படி, MyFixGuide மூலம், வரவிருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறன் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள EB-BS906ABY பேட்டரி 4,370mAh மதிப்பிடப்பட்ட திறன் கொண்டதாக கூறப்படுகிறது. இது வழக்கமான பேட்டரி திறன் 4,500mAh ஆக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரி 4.45V அதிகபட்ச மின்னழுத்தத்தைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி சாம்சங் கேலக்ஸி எஸ் 22+க்குச் சொந்தமானது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை ஒப்பிடுகையில், கேலக்ஸி S21+ 4,800mAh பேட்டரியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், EB-BS908ABY பேட்டரி தொகுதி 4,855mAh மதிப்பிடப்பட்ட திறனுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது 5,000mAh வழக்கமான பேட்டரி திறனுடன் வரக்கூடும் என்பதைக் குறிக்கிறது. இதன் மதிப்பிடப்பட்ட மின்னழுத்தம் 3.88V மற்றும் அதிகபட்ச மின்னழுத்தம் 4.45V ஆகும். இந்த பேட்டரி சாம்சங் கேலக்ஸி S22 அல்ட்ரா மொபைலுடன் பேக் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா இந்தியாவில் ₹ 105,999 என்ற விலையில் விற்கப்படலாம் என்றும் மேலும் இது 5,000 mAh பேட்டரியுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.
முந்தைய அறிக்கையின்படி, ரெயின்போ RGB-களில் சாம்சங் 65W சார்ஜிங் திறன் குறித்து சோதனை செய்தது. அதாவது R, G மற்றும் B முறையே கேலக்ஸி எஸ் 22, கேலக்ஸி எஸ் 22+ மற்றும் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும் சாம்சங் தனது மொபைல் பேக்கிங்கில் 65W ஃபாஸ்ட் சார்ஜரை இணைத்து வழங்காது என்றும், வாடிக்கையாளர்கள் அதனை தனியாக வாங்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Also read... குறைந்தபட்ச பிராட்பேண்ட் ஸ்பீட் 2 mbps, கிராமப்புற சந்தாதாரர்களுக்கு சலுகை.. அரசுக்கு டிராய் பரிந்துரை...!
மேலும் இதற்கடுத்ததாக வெளியாகவுள்ள சாம்சங் முதன்மை சீரிஸுக்கான மாடல் எண்களும் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. SamMobile அறிக்கையின்படி, வெண்ணிலா கேலக்ஸி எஸ் 22 எஸ்எம்-எஸ் 901 எக்ஸ், கேலக்ஸி எஸ் 22+ மாடல் எண் எஸ்எம்-எஸ் 906 எக்ஸ் மற்றும் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா எஸ்எம்-எஸ் 908 எக்ஸ் போன்ற மாடல் எண்களை கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் 5 ஜி -யை ஆதரிப்பதாகவும், ஜனவரி 2022 -ல் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் அதில் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அன்று உலக அளவில் அறிமுகமானது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா ஸ்மார்ட்போன், கேலக்ஸி எஸ் 21 அல்ட்ராவில் காணப்படும் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சாரின் ரீஃபைன்ட் வெர்ஷனில் வரலாம். சாம்சங் நிறுவனம் ஒலிம்பஸ் உடன் இணைந்து வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் கேமராக்களை உருவாக்கியதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. எவ்வாறாயினும், இந்த தகவல் இன்னும் வதந்தியாகவே உள்ளது. ஏனெனில் இந்த தகவல் இரு தரப்பினராலும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Samsung Galaxy