Home /News /technology /

Samsung Galaxy S11 details: லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ் 11 மாடல் ஸ்மார்ட்போன் தகவல்கள்...!

Samsung Galaxy S11 details: லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ் 11 மாடல் ஸ்மார்ட்போன் தகவல்கள்...!

Samsung

Samsung

  • News18
  • Last Updated :
    சாம்சங் கேலக்ஸி எஸ் 11 மாடல் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. 5 ஜி வசதி சப்போர்ட் செய்யும் வகையில் இந்த போன் இருப்பதாக கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் சாம்சங் தனது எஸ் சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

    அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. புதிய விவரங்கள் ஒன் யு.ஐ. 2.0 பீட்டாவில் இருந்து வெளியாகியுள்ளது. அதன்படி குவால்காம் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் இதுவரை அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 865 மற்றும் எக்சைனோஸ் 9830 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் சாம்சங் இதே வழக்கத்தை பின்பற்றி வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் டிசம்பர் மாதம் நடைபெறும் வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சாம்சங் 9830 பிராசஸர் ஒன்றிரண்டு மாதங்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    2020 கேலக்ஸி எஸ் சீரிஸ் மொத்தம் மூன்று மாடல்களில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் ஒரு மாடலில் 5ஜி வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் LPDDR5 ரேம் மற்றும் UFS 3.0 மெமரி கொண்டிருக்கலாம்.


     
    Published by:Sankar
    First published:

    Tags: Samsung

    அடுத்த செய்தி