₹6 ஆயிரம் கேஷ் பேக் ஆஃபர் உடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ளஸ்..!

ஆன்லைன் விற்பனைத் தளங்களில் ஐசிஐசிஐ வங்கியின் கார்டு பயன்படுத்தினால் 6 ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் வழங்கப்பட உள்ளது.

₹6 ஆயிரம் கேஷ் பேக் ஆஃபர் உடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ளஸ்..!
சாம்சங் கேலக்ஸி நோட் 10
  • News18
  • Last Updated: August 20, 2019, 2:47 PM IST
  • Share this:
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ளஸ் ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்களும் இன்று வெளியாகி உள்ளன.

ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் இவ்விரு ஃபோன்களுக்குமான விற்பனை இந்தியாவில் தொடங்க உள்ளது. இன்று நண்பகல் 12 மணி அளவில் பெங்களூருவில் சாம்சங் ஓபெரா ஹவுஸில் இரு புதிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கான வெளியீட்டு விழா நடைபெற்றது. ஸ்டோர்களில் மட்டுமல்லாது அமேசான், ஃப்ளிப்கார்ட், பேடிஎம் மால், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் டாடா க்ளிக் ஆகிய ஆன்லைன் விற்பனைத் தளங்களிலும் விற்பனைக்கு உள்ளது.

இந்தியாவுக்கான விலைப்பட்டியலும் இன்றைய வெளியீட்டு விழாவில் தெரியப்படுத்தப்பட்டது.


சாம்சங் கேலக்ஸி நோட் 10, 8 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஸ்டோரேஜ் ரகம் 69,999 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 10+ விலை 79,999 ரூபாய் ஆகும். இதுவே 12 ஜிபி ரேம்+ 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபோன் என்றால் விலை 89,999 ரூபாய் ஆகும்.

இவ்விரு ஸ்மார்ட்ஃபோன்களும் ஆரா ப்ளாக், ஆரா க்ளோ மற்றும் ஆரா வைட் ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு உள்ளன. சாம்சங் ஸ்டோர்களில் வாங்கினால் ஹெச்டிஎஃப்டி கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 6ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் வழங்கப்பட உள்ளது.

மேலும், ஆன்லைன் விற்பனைத் தளங்களில் ஐசிஐசிஐ வங்கியின் கார்டு பயன்படுத்தினால் 6 ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் வழங்கப்பட உள்ளது. கூடுதலாக, வட்டியில்லா தவணை முறை, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகிய சலுகைகளும் உள்ளன.மேலும் பார்க்க: அசத்தல் அம்சங்களுடன் வெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ளஸ்..!
First published: August 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading