அசத்தல் அம்சங்களுடன் வெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ளஸ்..!

கேலக்ஸி நோட் 10 ப்ளஸ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகவும், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகவும் இரண்டு ரகங்களில் உள்ளன.

அசத்தல் அம்சங்களுடன் வெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ளஸ்..!
சாம்சங் கேலக்ஸி நோட் 10, நோட் 10 ப்ளஸ்
  • News18
  • Last Updated: August 9, 2019, 5:56 PM IST
  • Share this:
எதிர்பார்க்கப்பட்ட அனைத்து அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்களும் நேற்று வெளியாகி உள்ளன.

இரண்டு ரகங்களாக சாம்சங் கேலக்ஸி நோட் 10 வெளியானது சில வேற்றுமைகள் கொண்டதாக இருந்தாலும் கேமிரா அம்சங்கள் இரண்டும் ஒரேமாதிரியாகவே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், கேலக்ஸி நோட் 10 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களின் அடிப்படையைக் கொண்டும் இரண்டு ரகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

கேலக்ஸி நோட் 10 4ஜி ரகம் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகவும் 5ஜி ரகம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்ஃபோனாகவும் உள்ளது. கேலக்ஸி நோட் 10 ப்ளஸ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகவும் இரண்டு ரகங்களில் உள்ளன.


இந்த இரு ஸ்மார்ட்ஃபோன்களுக்குமான இந்திய விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும் அமெரிக்காவில் கேலக்ஸி நோட் 10 67,500 ரூபாயும் (இந்திய மதிப்பில்) கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் 78ஆயிரம் ரூபாயும் (இந்திய மதிப்பில்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 100 MP கேமிரா உடனான ஸ்மார்ட்ஃபோன்..! அறிமுகப்படுத்துகிறது ஜியோமி
First published: August 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading