சாம்சங் ’M’ சீரிஸின் கீழ் புதியதொரு ஸ்மார்ட்போன்... வெளியீடு எப்போது..?

48+8+5 என மூன்று ரியர் கேமிராக்கள் கொண்ட M30 போனுக்கு 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமிராவும் சிறப்பு ஆகும்.

சாம்சங் ’M’ சீரிஸின் கீழ் புதியதொரு ஸ்மார்ட்போன்... வெளியீடு எப்போது..?
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 12, 2019, 3:33 PM IST
  • Share this:
சாம்சங் ’M’ சீரிஸின் கீழ் புதிதாக சாம்சங் M50 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளது.

ஆன்லைன் மற்றும் ஸ்டோர்களில் நவம்பர் 15-ம் தேதி முதலே விற்பனை தொடங்கிவிடும். சாம்சங்-ன் M சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதுவரையில் வெளியான M சீரிஸ் போன்களிலேயே M40 போன் அதிக விலை கொண்டதாகும்.

இதே M சீரிஸின் சமீபத்திய வரவாக M30 உள்ளது. 6,000mAh பேட்டரி திறன், 48 மெகாபிக்சல் கேமிரா என அசத்தும் M30 போனின் விலை 13,999 ரூபாய் ஆகும். 6.4 இன்ச் ஹெச்டி+ AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வரையிலான ரகங்கள் உள்ளன.


48+8+5 என மூன்று ரியர் கேமிராக்கள் கொண்ட M30 போனுக்கு 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமிராவும் சிறப்பு ஆகும். ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான OneUI-ன் கீழ் M30 இயங்குகிறது.

மேலும் பார்க்க: 6ஜி தொழில்நுட்பப் பணிகளைத் தொடங்கியது சீனா..!
First published: November 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading