ஸ்மார்ட்போன் பிரியர்கள் தனக்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்களை எப்போதும் எதிர்பார்த்து கொண்டிருப்பர். அந்த வகையில் எல்லா ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டிப் போட்டுகொண்டு ஒவ்வொரு மாதமும் புது ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். சிறந்த பேட்டரி பேக் அப், தரமான ப் ராசெஸ்ஸார், அட்டகாசமான கேமரா போன்ற அம்சங்களை எப்போதும் ஸ்மார்ட்போன் பிரியர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் தற்போது 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை பெரும்பாலோர் விரும்பி வாங்குகின்றனர். உங்கள் பட்ஜெட்டில் 20,000 ரூபாய்க்குவாங்க கூடிய 5 சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கு காண்போம்.,
ரெட்மி நோட் 10T :
ஆக்ட்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட், 5000 mAh பேட்டரி, 18W பாஸ்ட் ஜார்ஜிங் ஆகிய சிறப்பம்சங்கள் இந்த ரெட்மி நோட் 10T மாடலில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி வசதியும் உண்டு. இதன் இந்திய விலை ரூ.16,399-ஆக உள்ளது. மேலும் 6.5 இன்ச் டிஸ்பிளே, 90Hz ரெஃபிரஷ் ரேட், முழு HD+ ரிசொலியூசன், 48MP பிரைமரி ரியர் கேமிரா மற்றும் 8 MP முன்புற கேமிரா ஆகியவை இந்த மாடல் ஸ்மார்ட்போனில் தரப்பட்டுள்ளது. இது ரெட்மி மொபைல் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
ரியல்மீ X7 5ஜி :
ரியல்மீ X7 5ஜி மொபைல் இந்தியாவில் கடந்த வருடம் வெளியானது. இதில் ரெட்மி நோட் 10T மாடலில் கொடுத்துள்ள அதே மீடியாடெக் டைமென்சிட்டி 800U 5ஜி ப்ராசெஸ்ஸார் தரப்பட்டுள்ளது. 6.4 இன்ச் முழு HD+ சிறந்த AMOLED டிஸ்பிளே, 64MP ரியர் கேமிரா மற்றும் 16 MP முன்புற கேமிரா ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. 4,310 mAh பேட்டரி, 50W பாஸ்ட் ஜார்ஜிங் போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி வசதியும் உண்டு.
லாவா அக்னி 5ஜி :
சமீபத்தில் வெளியான இந்த லாவா அக்னி 5ஜி பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை நவம்பர் 17ம் தேதிக்குள் முன்பதிவு செய்தால் ரூ.17,999-க்குள் பெறலாம். அதன் பிறகு வாங்கினால் ரூ.19,999 செலுத்தி வாங்க வேண்டி இருக்கும். இதில் 6.78 இன்ச் டிஸ்பிளே, 90Hz ரெஃபிரஷ் ரேட், மீடியாடெக் டைமன்சிட்டி 810 ப்ராசெஸ்ஸார், கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இதுவும் 5ஜி வசதியுடன் வெளி வந்துள்ளது. மேலும் இதில் 64MP ரியர் கேமிரா, 16 MP செல்பி கேமிரா, 5000 mAh பேட்டரி, 50W பாஸ்ட் ஜார்ஜிங் போன்ற அம்சங்களும் தரப்பட்டுள்ளது.
Also read... மைக்ரோசாப்ட்டின் புதிய Surface Laptop SE - மாணவர்களுக்கான குறைந்த விலை லேப்டாப்!
iQOO Z3 5G :
ரூ.19,990-க்கு விற்கப்படும் இந்த iQOO Z3 5ஜி ஸ்மார்ட்போனில் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. யூசர்கள் சிறப்பான அனுபவத்தை பெற ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் இதில் அப்டேட் ஆகியுள்ளது. 6.58 இன்ச் முழு HD + LCD டிஸ்பிளே, 120Hz ரெஃபிரஷ் ரேட், குவால்காம் ஸ்நாப்டிராகன் 786ஜி சிப்செட் போன்ற சிறப்பம்சங்களும் இதில் உள்ளன. இந்த iQOO Z3 ஸ்மார்ட்போன் 64MP பிரைமரி GW3 சென்சார் கொண்ட ட்ரிப்பில் ரியர் கேமிரா வசதி கொண்டுள்ளது. மேலும் இதில் 4,400 mAh பேட்டரி, 55W விரைவான ஜார்ஜிங் வசதி, 5 அடுக்கு கூலிங் சிஸ்டம் போன்ற சிறப்பம்சங்களும் உள்ளன.
சாம்சங் கேலக்சி M32 5ஜி :
சாம்சங் மொபைல் பிரியர்களுக்கு ஏற்ற சிறப்பான 5ஜி ஸ்மார்ட்போன் தான் இந்த சாம்சங் கேலக்சி M32 மாடல். ரூ.20,999-க்கு விற்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 720 ஆக்ட்டா கோர் ப்ராசெஸ்ஸார், , 6.5 இன்ச் TFT டிஸ்பைல், HD+ ரிசொலியூசன், கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் 48 MP ரியர் கேமிரா மற்றும் 5,000mAh பேட்டரி வசதியும் இதில் உள்ளது. சாம்சங் யூசர்களுக்கு சிறந்த அனுபவத்தை தர ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் இதில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.