48MP ட்ரிபிள் கேமிரா உடனான சாம்சங் கேலக்ஸி M30 செப்டம்பர் வெளியீட்டுக்குத் தயார்!

இந்தியாவைப் பொறுத்தவரையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

48MP ட்ரிபிள் கேமிரா உடனான சாம்சங் கேலக்ஸி M30 செப்டம்பர் வெளியீட்டுக்குத் தயார்!
சாம்சங்
  • News18
  • Last Updated: August 25, 2019, 7:17 PM IST
  • Share this:
சாம்சங் கேலக்ஸியின் M சீரிஸ்-க்குக் கிடைத்த பெரும் வெற்றியால் புதிதாக 48MP ட்ரிபிள் கேமிரா உடனான சாம்சங் கேலக்ஸி M30 ஸ்மார்ட்ஃபோனை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.

சாம்சங் கேலக்ஸி M சீரிஸ் வரிசையில் இதுவரையில் வெளியான 4 ஸ்மார்ட்ஃபோன்களில் இல்லாத சிறப்பம்சமாக Exynos ப்ராசஸர் திறன் கொண்டு கேலக்ஸி M30 இயங்குகிறது. இன்றைய ட்ரெண்ட்க்கு ஏற்ப 48 மெகாபிக்சல் உடனான மூன்று ரியர் கேமிராக்கள் இதில் இடபெற்றுள்ளன.

ஜியோமி K20 ப்ரோ, Mi A3 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஆகிய ஃபோன்களுக்கு இந்த கேலக்ஸி M30 பெரும் போட்டியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விழாக்கால வெளியீடாக வெளிவர உள்ள புதிய M30 மூலம் ஜியோமியின் இந்திய முன்னுரிமை தந்திரத்தை சாம்சங் நிறுவனமும் பின்பற்றத் தயாராகி உள்ளதாகவே இருக்கிறது.


இந்தியாவைப் பொறுத்தவரையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதனாலே 7 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலான ஃபோன்கள் சந்தையில் தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பார்க்க: அடுத்த மாதம் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A30s... கசிந்த விலைப்பட்டியல்!
First published: August 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...