பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்ஸி M30s, கேலக்ஸி M10s

சாம்சங் கேலக்ஸி M30s, கேலக்ஸி M10s ஆகிய இரு போன்களும் செப்டம்பர் 29-ம் தேதி முதல் ஆன்லைன் விற்பனைக்கு வருகிறது.

பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்ஸி M30s, கேலக்ஸி M10s
சாம்சங் கேலக்ஸி M30s
  • News18
  • Last Updated: September 19, 2019, 3:04 PM IST
  • Share this:
இந்தியாவில் விழாக்கால சிறப்பு அறிமுகமாக கேலக்ஸி M30s, கேலக்ஸி M10s ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை சாம்சங் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

மில்லனியல் மற்றும் ஜென் z தலைமுறையினரைக் கவரும் விதமாக பட்ஜெட் விலையில் சாம்சங் இரு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் M சீரிஸின் கீழ் கேலக்ஸி M30s, கேலக்ஸி M10s வெளியாகி உள்ளன. இதற்கு முன்னர் M சீரிஸின் கீழ் M10, M20, M30 மற்றும் M40 ஆகிய நான்கள் போன்கள் வெளியாகி உள்ளன.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி M10s போனின் விலை 8,999 ரூபாய் ஆகும். சாம்சங் கேலக்ஸி M30s போன் இரண்டு ரகங்களாக வெளியாகி உள்ளன. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 13,999 ரூபாயும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி M30s 16,999 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


சாம்சங் கேலக்ஸி M30s-ன் சிறப்பு அம்சமே இதனது பேட்டரி திறன்தான். 6,000 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் 29 மணி நேரம் வீடியோ பார்க்கலாம், 49 மணி நேர வாய்ஸ்கால், 131 மணி நேரம் இசை கேட்கலாம் என சாம்சங் குறிப்பிட்டுள்ளது.

Exynos 9611 ப்ராசஸர் திறன், 48 மெகாபிக்சல் திறன் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமிரா, 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா என கேலக்ஸி M30s அசத்துகிறது. கேலக்ஸி M10s 4,000mAh பேட்டரி திறன் கொண்டு உள்ளது. சாம்சங் கேலக்ஸி M30s, கேலக்ஸி M10s ஆகிய இரு போன்களும் செப்டம்பர் 29-ம் தேதி முதல் ஆன்லைன் விற்பனைக்கு வருகிறது.

மேலும் பார்க்க: Mi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்!

Loading...

சைபர் க்ரைம் முறைகேடுகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?
First published: September 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...