சாம்சங் கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அமேசானில் சிறப்புத் தள்ளுபடிகள்..!

மாதிரிப்படம்

அமேசானில் ஐசிஐசிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி அமேசானில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1,500 ரூபாய் வரையில் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமேசான் இந்தியாவில் சாம்சங் M சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சாம்சங் M10, M20, M30 மற்றும் M40 ஆகிய அனைத்து ஸ்மார்ட்ஃபோன்களுக்குமே அமேசான் தள்ளுபடி அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி M30 ஸ்மார்ட்ஃபோனுக்கு 1,000 ரூபாய் தள்ளுபடி உடன் 13,990 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட M30 ஸ்மார்ட்ஃபோன் முன்னர் 14,990 ரூபாய்க்கு விற்பனையாகியது. இதேபோல், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட M30, ஆயிரம் ரூபாய் தள்ளுபடியுடன் 17,990 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. கூடுதலாக சாம்சங் M சீரிஸ் ஃபோன்களுக்கு வட்டியில்லா தவணை, எக்ஸ்சேஞ் ஆஃபர் ஆகியவையும் உள்ளன.

அமேசானில் ஐசிஐசிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி அமேசானில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1,500 ரூபாய் வரையில் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல், இதர ஃபோன்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து தள்ளுபடி சலுகை கிடைக்கிறது.

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் சாம்சங் M சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7,800 ரூபாய் வரையில் தள்ளுபடி உள்ளது.

மேலும் பார்க்க: இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி K20, K20 ப்ரோ..!
Published by:Rahini M
First published: