Home /News /technology /

6,000mAh பேட்டரி திறன் உடனான புதிய ஸ்மார்ட்போன்- சாம்சங் அறிமுகம்

6,000mAh பேட்டரி திறன் உடனான புதிய ஸ்மார்ட்போன்- சாம்சங் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி M21

சாம்சங் கேலக்ஸி M21

நீலம் மற்றும் கறுப்பு ஆகிய இரு நிறங்களில் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 10 இயக்கம் இந்த போனின் மற்றொரு சிறப்பாகும்.

    அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது சாம்சங் கேலக்ஸி M21.

    இன்று நண்பகல் 12 மணி முதல் சாம்சங் கேலக்ஸி M21 விற்பனை தொடங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனை சாம்சங் தளத்திலும் அமேசான் தளத்திலும் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே இதனது பேட்டரி திறன்தான்.

    6,000mAh பேட்டரி திறன் உடனான இந்த போனுக்கு 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மூன்று ரியர் கேமிராக்கள் ஆகியன கூடுதல் சிறப்பாகும். மொத்தம் இரண்டு ரகங்களில் இந்த போன் விற்பனையில் உள்ளது.

    4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 13,499 ரூபாய்க்கும் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 15,499 ரூபாய்க்கும் விற்பனையில் உள்ளது. நீலம் மற்றும் கறுப்பு ஆகிய இரு நிறங்களில் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 10 இயக்கம் இந்த போனின் மற்றொரு சிறப்பாகும்.

    மேலும் பார்க்க: விற்பனையில் எகிறும் ஜியோமி... சர்வதேச அளவில் புதிய சாதனை..!




    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Rahini M
    First published:

    Tags: Samsung

    அடுத்த செய்தி