சாம்சங் வழங்கும் ‘ஸ்பெஷல்’ ஆஃபர்... ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே!

ஜியோ அல்லாத வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனை வருகிற பிப்ரவரி 26-ம் தேதி முதல் தான் தொடங்குகிறது.

சாம்சங் வழங்கும் ‘ஸ்பெஷல்’ ஆஃபர்... ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே!
ஜியோ அல்லாத வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனை வருகிற பிப்ரவரி 26-ம் தேதி முதல் தான் தொடங்குகிறது.
  • News18
  • Last Updated: February 22, 2019, 12:48 PM IST
  • Share this:
சாம்சங் கேலக்ஸி M20 மற்றும் M10 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஜியோ உடன் சேர்ந்து சிறப்பு ஆஃபர் அளிக்கிறது சாம்சங் நிறுவனம்.

இன்று தொடங்கும் இந்த ஆஃபர் திருவிழா முற்றிலும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு என்றே பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5-ம் தேதிக்குப் பின்னர் சாம்சங் கேலக்ஸி M20 மற்றும் M10 வாங்கிய, வாங்கும் அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ டபுள் டேட்டா ஆஃபர் வழங்கப்படுகிறது.


இன்று மதியம் 12 மணி முதல் இந்த ஆஃபர் தொடங்கி உள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் மை ஜியோ ஆப் அல்லது ஜியோ.காம் இணையதளப் பக்கம் மூலம் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனை ஆர்டர் செய்துகொள்ளலாம்.

3ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி M20 விலை 10,990 ரூபாய். 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி M20 12,990 ரூபாய் ஆகும்.

இதேபோல், 3ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி M10 8,990 ரூபாயும் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி M10 7,990 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஜியோ அல்லாத வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனை வருகிற பிப்ரவரி 26-ம் தேதி முதல் தான் தொடங்குகிறது.மேலும் பார்க்க: அதிமுகவை கிண்டலடித்த கமல்ஹாசன்
First published: February 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading