இன்று அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M10, M20

வருகிற பிப்ரவரி 5-ம் தேதி முதல் அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் ஸ்டோர்களில் புது M சீரிஸ் விற்பனைக்கு வரும்.

இன்று அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M10, M20
(Representative image)
  • News18
  • Last Updated: January 28, 2019, 12:31 PM IST
  • Share this:
பெரும் எதிர்பார்ப்புகளுக்குப் பின்னர் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M சீரிஸ் இன்று இந்தியாவில் வெளியிடப்படுகிறது.

தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் இந்தப் புதிய ரக ஸ்மார்ட்ஃபோன்களை இளம் தலைமுறையினரைக் கவரும் விதத்தில் வடிவமைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

அதிகத் திறன் கொண்ட பேட்டரி, அதி நுட்பமான கேமிரா, ஹை ரெசொலியூஷன் கொண்ட டிஸ்ப்ளே என தனது M சீரிஸ் இளைஞர்களை அசத்தும்.


இன்று மாலை சாம்சங் தனது M சீரிஸ் ரகத்தை வெளியிட உள்ளது. அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் ஸ்டோர்களில் புது M சீரிஸ் விற்பனைக்கு வரும். வருகிற பிப்ரவரி 5-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கான விற்பனைத் தொடங்க உள்ளது.

2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி M10 இந்தியாவில் 7,990 ரூபாய்க்கு அறிமுகமாகிறது. இதுவே 3ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருந்தால் 8,990 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி M20 ஸ்மார்ட்ஃபோன், 6.2 இன்ச் டிஸ்ப்ளே உடன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியொ அடிப்படையில் இயங்குகிறது. இதனது விலை 10,990 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட M20 12,990 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது.மேலும் பார்க்க: அழகிரிக்கு வரவேண்டிய பதவியை ஸ்டாலின் பறித்துவிட்டார் - திண்டுக்கல் சீனிவாசன்
First published: January 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading