ஸ்மார்ட்போன் பிரியர்களை குஷிப்படுத்த ஒவ்வொரு வாரமும் எதோ ஒரு வகையில் புது மாடல் மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் பல வித வகைகள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே அதிக அளவில் விற்பனை ஆகின்றன. இதற்கு முக்கிய காரணம் அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும், அவற்றின் திறனும் தான். ஒரு ஸ்மார்ட்போன் சிறந்த திறனுடன் இருந்தால் யாராக இருந்தாலும் அதை வாங்க விரும்புவார்கள். அதே போன்று அந்த ஸ்மார்ட்போன் நமது பட்ஜெட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்போம்.
மேலும், அந்த மொபைலின் பிராண்ட் பற்றியும் நாம் முக்கியமாக யோசிப்போம். சிறந்த பிராண்ட்களில் ஒன்றாக நாம் குறிப்பிடுவது சாம்சங் பிராண்டையும் தான். இதன் சிறப்பு திறனும், நல்ல அம்சங்களும் தான் இதற்கான வாடிக்கையாளர்களை தேடி வர வைக்கிறது. சாம்சங் மொபைலில் பல வகைகள் இருந்தாலும், புதிதாக அறிமுகம் செய்ய கூடிய ஸ்மார்ட்போன் மீது எல்லோருக்கும் ஒரு கண் இருக்க தான் செய்கிறது. அதன்படி, சாம்சங் நிறுவனம் வருகின்ற ஜூலை 14 அன்று இந்தியாவில் இரண்டு கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது.
சாம்சங் கேலக்ஸி M13 மற்றும் கேலக்ஸி M15 ஸ்மார்ட்போன்கள் இந்த எம் சீரிஸில் புதிய சேர்க்கைகளாக வரவுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கேலக்சி M13 ஸ்மார்ட்போன் 5ஜி வசதியுடன் வருகிறது. மேலும் இது சாம்சங் மாடல் 5ஜி போன்களில் மிகவும் மலிவு விலை கொண்ட போனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கேலக்ஸி M13 மற்றும் கேலக்ஸி M13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வருகின்ற ஜூலை 14 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகமாகலாம் என்று தெரிய வந்துள்ளது. அதன்படி அமேசான் தளத்தில் சாம்சங் நிறுவனம் இதற்காக ஒரு மைக்ரோசைட்டை அமைத்துள்ளது. இதில் இந்த மொபைல்களை நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இந்த இரண்டு போன்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றாலும், சில அம்சங்கள் மாறி வரவுள்ளதாக கூறுகின்றனர். சாம்சங் நிறுவனம் ஏற்கனவே கேலக்சி M13 4ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டு இருந்தது. இருப்பினும் இந்தியாவில் இது வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டிருந்தது. கேலக்சி M13 4ஜி மொபைலானது 6,000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் மற்றும் LCD போன் பேனலை இதில் பயன்படுத்தி உள்ளனர். மேலும் வால்யூம் பட்டன்களின் பக்கத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சாரை பொருத்தி உள்ளனர்.
Also Read : இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆண்ட்ராய்டு Tablets மற்றும் iPad மாடல்கள்.!
கேலக்சி M13 4ஜி ஸ்மார்ட்போனானது 12GB ரேம் வசதியுடன் வருகிறது. மேலும் இதில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது. கேலக்சி M13 5ஜி ஸ்மார்ட்போனானது 5,000 mAh பேட்டரியையும், சிறந்த திறனையும் கொண்டிருக்கிறது. கேலக்சி M13 மற்றும் கேலக்சி M13 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் பச்சை, வெண்கலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும். மேலும் இதில் சிம்மைப் பொருட்படுத்தாமல், சிறந்த இணைப்பைப் பெற, “ஆட்டோ டேட்டா ஸ்விட்சிங்” அம்சத்தையும் கொண்டு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.