ஒருவழியாக விற்பனைக்கு வருகிறது சாம்சங் Galaxy Fold..!

பின்புறத்தில் 16+12+12 மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமிராக்களும் 10மெகாபிக்சல் செலஃபி கேமிராவும் கொடுக்கப்பட்டுள்ளன.

Web Desk | news18
Updated: July 26, 2019, 4:20 PM IST
ஒருவழியாக விற்பனைக்கு வருகிறது சாம்சங் Galaxy Fold..!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 26, 2019, 4:20 PM IST
சாம்சங் Galaxy Fold ஸ்மார்ட்ஃபோனின் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிற செப்டம்பர் மாதம் உறிதியாக விற்பனைக்கு வரும் என சாம்சங் அறிவித்துள்ளது.

தென் கொரிய நிறுவனமான சாம்சங், Galaxy Fold ஸ்மார்ட்ஃபோனை நீண்ட காலமாக எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறது. மடிக்கும் வகையிலான இந்த ஸ்மார்ட்ஃபோனில் தொடர்ந்து பிரச்னைகள் வரவே வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

தற்போது வடிமைப்பிலும் கட்டமைப்பிலும் மேம்பாடு செய்யப்பட்டிருப்பதால் இனி பிரச்னை ஏதும் எழாது என சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும், ஃபோனின் மேல் மற்றும் கீழ் பாகங்கள் உடையாதவாறு பாதுகாப்புக் கவசம் போன்ற இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது கடைசிக்கட்ட சோதனைகள் நடைபெற்று முடிந்ததும் செப்டம்பரில் Galaxy Fold வெளியாக உள்ளது. முதல் அறிவிப்பில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி Galaxy Fold வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது. அதன் பின்னர் சோதனை ஓட்டத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்ததால் மூன்று மாத மறு கட்டமைப்புக்குப் பின்னர் மீண்டும் வெளியீட்டுக்கு Galaxy Fold தயாராகி உள்ளது.

7nm Qualcomm Snapdragon 855 octa-core திறன் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடனுன் இந்த Galaxy Fold வருகிறது. பின்புறத்தில் 16+12+12 மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமிராக்களும் 10மெகாபிக்சல் செலஃபி கேமிராவும் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஏற்ற PUBG மொபைல் லைட்..!
First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...