இரண்டு டெஸ்ட்டில் ‘பாஸ்’... இரண்டில் ‘ஃபெயில்’ - வெளியாகுமா சாம்சங் கேலக்ஸி Fold?

அமெரிக்காவில் இந்த போன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக வெளியாக உள்ளது. இதனது பேட்டரி திறன் 4,380mAh ஆகும்.

இரண்டு டெஸ்ட்டில் ‘பாஸ்’... இரண்டில் ‘ஃபெயில்’ - வெளியாகுமா சாம்சங் கேலக்ஸி Fold?
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 23, 2019, 7:59 PM IST
  • Share this:
சாம்சங் கேலக்ஸி Fold ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் வெளியாகும் என்றே கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி Fold போன் மடிக்கும் சோதனையில் தோல்வி அடைந்ததால் அதனது வெளியீடு தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வந்தது. அமெரிக்காவில் இந்த வாரமே சாம்சங் கேலக்ஸி Fold வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் கொரிய மாடல் ஒன்றில் யூட்யூப் பிரபலம் ஒருவர் பல கட்ட சோதனைகளைச் செய்து காண்பித்த வீடியோ வைரலாகி வருகிறது.

JerryRigEverything என்னும் யூட்யூப் சேனலில் சாம்சங் கேலக்ஸி Fold போனை பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தினார் ஜேக் நெல்சன். அதில் போனை வளைத்து, ஸ்க்ராட்ச் சோதனை, தீப்பிடிக்கிறதா என்ற சோதனை, மணல் வைத்து என பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


சாம்சங் கேலக்ஸி Fold போனின் சிறப்பம்சமே அதனது மடிக்கும் திறன்தான். ஆனால், சாம்சங் நிறுவனத்தின் சோதனையிலேயே அது தோல்வியுற்றதால் மட்டுமே வெளியீடு தள்ளிப்போனது. அதன் பிறகு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது இந்த யூட்யூப் வீடியோ மூலம் நிரூபனம் ஆகியுள்ளது.


மடிக்கும் சோதனையிலும் தீ சோதனையிலும் சாம்சங் கேலக்ஸி Fold தேர்ச்சிப் பெற்றது. ஆனால், மணல் மற்றும் ஸ்க்ராட்ச் சோதனையில் போன் தோல்வி அடைந்தது. மணல் சிந்தினால் அது சாம்சங் கேலக்ஸி Fold போனின் உள்ளே புகுந்துவிடுவதால் பயன்பாட்டுக்கு வரும்போது வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்குமாறு அந்த வீடியோ எச்சரித்துள்ளது.

Loading...

அமெரிக்காவில் இந்த போன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக வெளியாக உள்ளது. இதனது பேட்டரி திறன் 4,380mAh ஆகும்.

மேலும் பார்க்க: எதிர்ப்புகளையும் மீறி லிப்ரா கரன்ஸி வெளியீட்டுக்குத் தயாராகும் ஃபேஸ்புக்..!

தேசியக் கல்விக் கொள்கையால் பாதிப்பு! கல்வியலாளர் வேதனை
First published: September 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...