ஒரு வழியாக வெளியீட்டுத் தேதி உறுதியானது- செப்., 6 முதல் சாம்சங் கேலக்ஸி Fold விற்பனை!

இந்தியாவில் இந்த ஃபோன் 1.50 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வழியாக வெளியீட்டுத் தேதி உறுதியானது- செப்., 6 முதல் சாம்சங் கேலக்ஸி Fold விற்பனை!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: August 31, 2019, 8:12 PM IST
  • Share this:
செப்டம்பர் 6-ம் தேதி சாம்சங் கேலக்ஸி Fold வெளியாவது உறுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் விற்பனை தென் கொரியாவில் தொடங்கும் என சாம்சங் அறிவித்துள்ளது. சீனாவில் சாம்சங் கேலக்ஸி Fold முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் பிப்ரவரி மாதம் சாம்சங் கேலக்ஸி Fold வெளியாவதாக இருந்தது. ஆனால், ஃபோனின் திரை மடிக்கும் போது உடைகிறது என்ற குறைபாடால் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது.

இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் முக்கிய சந்தைகள் என்றபோதும் வெளியீட்டுப் பட்டியலில் இந்த நாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி Fold ஃபோனில் பல பிரச்னைகள் எழுந்ததால் வெளியாவதில் தாமதமானது. தற்போது வடிமைப்பிலும் கட்டமைப்பிலும் மேம்பாடு செய்யப்பட்டிருப்பதால் இனி பிரச்னை ஏதும் எழாது என சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும், ஃபோனின் மேல் மற்றும் கீழ் பாகங்கள் உடையாதவாறு பாதுகாப்புக் கவசம் போன்ற இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவில் இந்த ஃபோன் 1.50 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 7nm Qualcomm Snapdragon 855 octa-core திறன் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் உடனுன் இந்த Galaxy Fold வருகிறது.
First published: August 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading