Home /News /technology /

13-இன்ச், 15-இன்ச் திரைகளுடன் வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி புக் புரோ, புக் புரோ 360!

13-இன்ச், 15-இன்ச் திரைகளுடன் வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி புக் புரோ, புக் புரோ 360!

சாம்சங் கேலக்ஸி புக் புரோ, புக் புரோ 360

சாம்சங் கேலக்ஸி புக் புரோ, புக் புரோ 360

சாம்சங் கேலக்ஸி புக் புரோ 13-இன்ச் எடை 870 கிராமில் இருந்து தொடங்குகிறது.

  • News18
  • Last Updated :
சாம்சங் கேலக்ஸி புக் புரோ, கேலக்ஸி புக் புரோ 360 அல்ட்ராபுக்குகள் மற்றும் கன்வெர்ட்டபிள் மடிக்கணினிகளை அறிமுகம் செய்வதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் என்ன விலையில் விற்பனையாகிறது மற்றும் விற்பனையாகும் தேதிகள் என்ன என்பது குறித்த எந்த விவரங்களும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த புதிய இயந்திரங்களில் போர்ட்டபிலிட்டி அடிப்படையில் மடிக்கணினிகளுக்கு வழங்கப்படும் சலுகையின் ஒட்டுமொத்த செயல்திறனுடன் இணைந்து சுவாரஸ்யமான விவரக்குறிப்புகளும் அடங்கியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி புக் புரோ 13-இன்ச் எடை 870 கிராமில் இருந்து தொடங்குகிறது. மேலும் 11.2 மிமீ தடிமனைக் கொண்டுள்ளது. இவை தரமான ஸ்பெசிபிகேஷன்களைக் கொண்ட மெலிதான மற்றும் இலகுவான அல்ட்ராபுக்குகளில் ஒன்றாகும்.

சாம்சங் கேலக்ஸி புக் புரோ-வின் முக்கிய ஸ்பெசிபிகேஷன்கள்:

ஸ்பெசிபிகேஷன்களைக் பொறுத்தவரை, கேலக்ஸி புக் புரோ 13 மற்றும் புரோ 15 இன்ச் ஆகியவை 13.3-AMOLED மற்றும் 15.6-AMOLED பேனல்கள், 16:9 முழு எச்டி தீர்மானங்களுடன் கிடைக்கின்றன. இந்த வகைகளில் தொடுதல் அல்லாத டிஸ்பிளே பேனல் இடம்பெறுகிறது. இவை பெரிய அளவிலான டிஸ்பிளே மற்றும் சிறிய ஸ்பேஸ் யூசர்களுக்கு ஏற்ற இரண்டு அளவுகளில் வருகின்றன. மேலும் இதன் ரேம் வகைகள் 8 ஜிபி, 16 ஜிபி மற்றும் 32 ஜிபி LPDDR4X விருப்பங்களில் கிடைக்கின்றன. அதே நேரத்தில் ஸ்டோரேஜ் விருப்பங்கள் 1TB NVMe SSD வரை செல்லும். இரண்டு மடிக்கணினிகளும் 11வது ஜெனரேஷன் இன்டெல் கோர் i3, i5 மற்றும் i7 ப்ராசசர் விருப்பங்களுடன் வருகின்றன. ப்ரோ 13-இன்ச் வேரியண்ட் ஐரிஸ் எக்ஸ் (Iris Xe) ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் உடன் வந்தாலும், 15-இன்ச் கேலக்ஸி புக் ப்ரோ என்விடியா ஜியிபோர்ஸ் MX450 GPU-யுடன் விருப்பமான SKU-வில் வருகிறது.

Also read... பர்பிள் நிறத்தில் ஐபோன் 12, கலர்புல் ஐமாக், ஐபாட் ப்ரோ சீரிஸ்... ஆப்பிளின் புதிய மாறுபாடுகள் வெளியீடு!

சாம்சங் கேலக்ஸி புக் புரோ 13 எல்.டி.இ வேரியண்டிலும் வருகிறது. ஆனால் இது அல்ட்ராபுக்கின் பிரீமியம் பிளேஸ்மென்ட் 5G இணைப்பைப் பெறாதது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, மடிக்கணினிகளில் உள்ள விருப்பங்களில் வைஃபை 6/6E, புளூடூத் 5.1, ஒரு தண்டர்போல்ட் 4, ஒரு யூ.எஸ்.பி-சி, ஒரு யூ.எஸ்.பி-ஏ 3.2, ஒரு எச்.டி.எம்.ஐ (இது 15-இன் மாறுபாட்டில் மட்டுமே), 3.5 மி.மீ ஆடியோ போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்.டி மெமரி கார்டு ஸ்லாட் ஆகியவை அடங்கும். மேலும் இந்த மடிக்கணினிகளில் சாம்சங்கின் புதிய தலைமுறை புரோ கீபோர்ட் சிசர்ஸ் சுவிட்சுகள், 1 மிமீ கி ட்ராவல் மற்றும் 23 சதவீதம் பெரிய டிராக்பேடுகள் உள்ளன. மேலும் இவற்றுடன் டால்பி அட்மோஸ் சான்றிதழோடு சாம்சங்கின் வழக்கமான ஏ.கே.ஜி டியூன் செய்யப்பட்ட ஸ்பீக்கர்களும் கிடைக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி புக் புரோ 360-ன் முக்கிய ஸ்பெசிபிகேஷன்கள்:

கன்வெர்ட்டிபிள் வேரியண்ட்டுகளில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேக்கள் உள்ளன. ப்ரோ 360 13- இன்ச் வேரியண்ட் இந்த லேப்டாப் வரிசையில் 5 ஜி இணைப்புகளைக் கொண்ட ஒரே பதிப்பாகும். கேலக்ஸி புக் புரோ 360-ன் அனைத்து SKU களும் 11 வது ஜெனரேஷன் இன்டெல் ப்ராசசர்களால் இயக்கப்படுகின்றன. மேலும் கோர் i5 மற்றும் கோர் i7 SKU-களில் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் மற்றும் கோர் i3 SKU-களில் UHD ஆகியவை உள்ளன. ரேம் விருப்பங்களை பொறுத்தவரை கேலக்ஸி புக் புரோ 360 13-இன்ச்சில் 16 ஜிபி LPDDR4X மற்றும் 15 இனச் வேரியண்டில் 32 ஜிபி வரை இருக்கும். ஸ்டோரேஜ் விருப்பத்தை பொறுத்தவரை 1TB NVMe SSD-கள் வரை இருக்கும். ஸ்பீக்கர், கீபோர்டு மற்றும் டிராக்பேட்களுடன் வரிசையில் இருக்கும் மற்ற தயாரிப்புகளும் கிடைக்கின்றன. 13-இன்ச் மற்றும் 15-இன்ச் மாறுபாடுகளுக்கு இடையிலான போர்ட்ஸ் ரேன்ஞ் அப்படியே உள்ளது.

இதன் பொதுவான அம்சங்களைப் பொறுத்தவரை, கேலக்ஸி புக் புரோ சீரிஸ் 13 இன்ச் மடிக்கணினிகளில் 63Whr பேட்டரிகளையும், 15-இன்ச் வகைகளில் 68Whr பேட்டரிகளையும் பெறுகிறது. மடிக்கணினிகளில் கைரேகை அங்கீகாரமும் பவர் கீஸ்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேலும் இந்த சீரிஸின் நான்கு வகைகளும் மிஸ்டிக் நேவி மற்றும் மிஸ்டிக் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்போது, கன்வெர்ட்டிபிள் வேரியண்ட் சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸுடன் அறிமுகப்படுத்திய புதிய மிஸ்டிக் ப்ரோன்ஸ் ஷேட்களை பெறுகின்றன. இதற்கிடையில், நிலையான கேலக்ஸி புக் புரோ, மூன்றாவது வண்ண விருப்பமான மிஸ்டிக் பிங்க் கோல்ட் நிறத்தையும் பெறுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Samsung Galaxy

அடுத்த செய்தி